பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84

இவர் தம் பேச்சைக் கேட்டார் இளைய நேரு புண்பட்ட நெஞ்சில் மேலும் வேல் கொண்டு குத்துவது போலிருந்தது அவருக்கு ஆத்திரம் கொண்டார்; துடித்தார்.

பிப்ரவரி மாதம் பதினாராந் தேதி லார்ட் இர்வினுக்கும் கடிதம் எழுதினார் காந்தி, மனம் திறந்து பேசுவோம் ” என்றார். லார்டு இர்வினும் இணங்கினார். வருக என்றார். லார்டு இர்வினின் இணக்கம் தந்தி மூலம் காந்திக்கு அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் பதினாறாம் தேதி டில்லிக்குப் புறப்பட்டார் காந்தி.

3.

அடுத்த நாள் பகல் இரண்டு மணி. காந்தி இர்வின் பேச்சு தொடங்கியது; சரித்திரப் பிரசித்தி பெற்ற சமரச பேச்சு ஆரம்பமாகியது டில்லியில் வைசிராய் மாளிகையிலே.

"ஏன் இந்த பேச்சு? எதற்காக இந்த சமரசம்? இதற்குத் தானா இவ்வளவு பேர் சிறை சென்றொம்; தடியடி பட்டோம்? பெரியதொரு போராட்டத்தை நடத்தினோம். மாபெரும் தியாகமெல்லாம் ஒரு கணத்தே மண்ணாகிப் போவதா?’ என்று மனங்குமுறினார் ஜவஹர். மகாத்மாவிடம் தம் மனத்தில் பட்டதை வெளிப்படையாகவும் சொன்னார்.

" நீங்கள் சொல்வது முற்றும் நியாயமே; எனினும் நமது எதிரிகளுடன் பேசுவதால் நாம் எதையும் இழக்கப் போவதில்லையே ’’ என்றார் காந்தி.

“கொஞ்சம் பொறுமையாக இருந்துப் பாருங்கள்.”

ஜவஹர் இங்கே துடித்த அதே சமயத்தில் இங்கிலாந்திலே இன்னொருவர் மிக மிக துடித்தார். அவர் யார் ? கடைந்தெடுத்த கன்சர்வேடிவ் பேர்வழி வின்ஸ்டன் சர்ச்சில்,