பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

86

காந்தி என்ன செய்தார் ? ஆறு நிபந்தனைகளை வெளியிட்டார். என்ன நிபந்தனை ?

1) அரசியல் கைதிகள் எல்லோரையும் உடனே நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.

2) அடக்கு முறையை உடனே நிறுத்த வேண்டும்.

3) பறிமுதல் செய்த சொத்துக்களை எல்லாம் உரியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்.

4) அரசியலில் ஈடுபட்டதால் வேலையிழந்த சர்க்கார் ஊழியர்களுக்கு திரும்பவும் வேலை கொடுத்துவிட வேண்டும்.

5) உப்பு எடுக்கவும், கள்ளுக்கடைகள், அந்நியத் துணிக் கடைகள் முதலியவற்றின் முன் நின்று மறியல் செய்யவும் உரிமை கொடுத்தல் வேண்டும்.

6) போலீசின் வரம்பு மீறிய செயல் குறித்து விசாரித்தல் வேண்டும்.

இவையே அந்த ஆறு நிபந்தனைகள்.

இவற்றையெல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் நிறை வேற்றுதல் வேண்டும்' என்றார் காந்தி.

ஏன் ?

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ந ல் .ெ ல ண் ண தி ைத நிரூபிப்பதற்காக. இது கண்டார் ஜவஹர். சீறினார்.

' மறியல் சுதந்திரமாம்! மண்ணாங் கட்டியாம் ; ன்ன்ன இது ? இதுவா பூர்ண சுயராஜ்யம் ? இதற்காகவா சண்டை போட்டோம் ? இதற்காகவா இவ்வளவு பேர்

சிறை சென்றோம் ? சொல்லொணாத துன்பங்களை எல்லாம் மேற்கொண்டோம்!” என்று சீறினார்.