பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89

பேச்சு வார்த்தை முறிந்து விடும் போல் தோன்றியது.

திடீரென சமாளித்தார் இர்வின் 'ஏன் முடியாது தெரியுமா ?” என்றார்.

" ஏன் ? . இது காந்தி

" போலிசின் வரம்பு மீறிய செயல்களை விசாரிக்கத் தொடங்கினால் பிறகு போலீசின் முறுக்குத் தளர்ந்து விடும். இன்னும் ஒரு சமயம் நீங்கள் சண்டை தொடங்கினால் போலீஸ் ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவை. ஆகவே இந்த விசாரணைக்கு நான் இணங்க முடியாது.”

“சபாஷ்! அப்படிச் சொல்லுங்கள். இது சரி. இனி நான் உங்களை இந்த விஷயத்தில் வற்புறுத்த மாட்டேன்!' என்றார் அண்ணல்,

சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிட்டு வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்ள இணங்கினார் காந்தி.

'சிறுப்பான்மையினருக்கும், பிரிட்டிஷ் நலன்களுக்கும், சமஸ்தானாதிபதிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்ட சமஷ்டியே இந்தியாவுக்கு ஏற்ற அரசியல் திட்டம்" என்றார் இர்வின்.

" ஆம் !" என்றார் காந்தி,

" இராணுவம், வெளி விவகாரம் இரண்டும் நீங்கலாக ' என்றார் இர்வின்.

' இருக்கட்டுமே ' என்றார் அடிகள்.

இப்படியாக சமரசப் பேச்சு நிறைவு பெற்றது.

மார்ச் மாதம் ஐந்தாம் தேதி, விடியற்காலை இரண்டு மணி. வைசிராய் மாளிகையிலிருந்து திருமயினார் காந்தி.

11