பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

9 |

காங்கிரஸ் பிரதிநிதியாக மேற்படி மகாநாட்டில் கலந்து கொள்ளுமாறு காந்தியை வேண்டியது.

இச் சமயம் லார்டு இர்வினின் பதவிக் காலம் முடிந்தது. அவர் இங்கிலாந்து போய்விட்டார்.

விலிங்க்டன் இந்திய வைசிராயாகப் பதவி ஏற்றார்.

இப்போது நிலைமை முற்றிலும் மாறியது காந்தி இர்வின் ஒப்பந்தம் காற்றிலே பறக்கவிட்டார் விலிங்க்டன். ஒப்பந்தத்தை அமுல் நடத்தும் எண்ணமே அவருக்கு இல்லை. சர்க்காரின் கெடுபிடி முன்னைவிட பன்மடங்கு ஆயிற்று. சமரசம் ஏற்பட்டு விட்டதாக எண்ணினார்களே ! அது வெறும் கானல் நீர் என்பது தெளிவாயிற்று. எனவே காந்தி என்ன செய்தார் ? அதிர்வெடி ஒன்று போட்டார் !

  • வட்டமேஜை மகாநாட்டுக்கு வரமாட்டேன்' என்றார். அவ்வளவுதான். அரசாங்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

காந்தியை அழைத்தார் விலிங்க்டன் பேசுவதற்கு.

ஆகஸ்டு மாதம் சிம்லாவிலே லார்டு விலிங்க்டனைக் கண்டு பேசினார் காந்தி. அதாவது ஆகஸ்ட் மாதம் 25த் தேதி,

ஜவஹரும் காந்தியுடன் சிம்லா சென்றார். பிரிட்டிஷ் அதிகாரிகளை கண்டு பேசினார்.

வைசிராயும் அவரைச் சேர்ந்தவர்களும் மிகவும் இனிமையாகப் பேசினார்கள். ஆனால் அதன் ஊடே என்ன காணப்பட்டது ?