பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

பிரிட்டிஷ் சர்க்காரின் இரும்புக் கரம் காணப்பட்டது.

மீண்டும் ஏ த | வ து வாலாட்டினால் நறுக்கி விடுவோம் ' என்று எச்சரிக்கை செய்கிற பாவனையில் இருந்தார்கள் அதிகாரிகள். மேலுக்கு தேன் கசிய பேசினார்கள்.

இவற்றையெல்லாம் கண்டு கொண்டார் ஜவஹர்.

வட்டமேஜை மகாநாடு முட்டை போடாது என்று உணர்ந்தார்.

காந்தியை எப்படியாவது வட்டமேஜை மகாநாட்டுக்கு அனுப்ப முயன்றார் வைசிராய், காந்தியும் இணங்கினார்.

ஆகஸ்ட் மாதம் 27ந் தேதி பம்பாய்க்குப் புறப்பட்டார் ஜவஹரும் காந்தியுடன் பம்பாய்க்கு பயணமானார்.

ஆகஸ்டு மாதம் 29ந் தேதி ' ராஜ புதனா ’’ என்ற கப்பலில் லண்டனுக்குப் புறப்பட்டார் காந்தி.

முப்பத்திரண்டாம் அத்தியாயம்

rெ s 篷 இரண்டாவது வட்டமேஜை மகாநாடு ஏன் ?

செப்டம்பர் மாதம் பன்னிரண்டாந் தேதி சனிக்கிழமை காந்தி லண்டன் சேர்ந்தார். லண்டன் மாநகரின் கீழ் திசையிலே ஒரு பெண்மணி. இந்தியாவின் நண்பர். மிஸ் மூரியல் லெஸ்டர் என்ற பெயர் கொண்டவர். காந்தியைத் தமது விருந்தினராக ஏற்றார்; உபசரித்தார்.