பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

93

அப்போது இங்கிலாந்திலே இந்தியா மந்திரியாக இருந்தவர் ஸர். ஸாமுவேல் ஹோர். கன்சர்வேடிவ் கட்சியினர். முதலில் அவரைச் சந்தித்து பேசினார் காந்தி.

  • மிஸ்டர் காந்தி; உண்மையைச் ஒளிக்காமல் சொல்லி விடுகிறேன் கேளுங்கள். உடனடியாக சு. த ந் தி ர ம் கொடுக்கிற எண்ணம் எங்களுக்கில்லை. டொமினியன் அந்தஸ்தும் வழங்கப் போவதில்லை. ஆனால் பையப்பைய அந்த லட்சியத்தை நோக்கிச் செல்வோம், அவ்வளவுதான். ' என்றார்.

'சபாஷ் ! சர் சாமுவேல் ! உங்களது நேர்மையை நான் பாராட்டுகிறேன்!” என்றார் காந்தி.

உண்மை வெளியாயிற்று. பின் வட்டமேஜை மகாநாடு எதற்கு வகுப்புவாதத்துக்கு தூபம் போட,

வட்ட மேன்ஜை ம க | ந I ட் டி லே வகுப்புவாதிகள் குரைத்தார்கள் ; எலும்புத் துண்டுக்கு குக்கல் குலைப்பது போல குலைத்தார்கள்.

யானை குட்டி போட்ட கதையாக முடிந்தது இரண்டாவது மகாநாடு.

டிசம்பர் முதல் தேதி லண்டன் துறைமுகத்தில் கப்பல் ஏறினார் காந்தி இந்தியாவுக்குத் திரும்பினர்.

இந்தியாவிலே நிலைமை எப்படி?

வங்காளத்திலே பயங்கர இ ய க் க ம் மீண்டும்

தலைதுாக்கியது. அடக்கு முறையை அவிழ்த்து விட்டது சர்க்கார்.