பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 * செளந்தர்ய.

ஏன் அப்படிக் கேட்டேன்? வாழ்வில் அலுப்பு. கூடவே ஏதோ பீதி. இதுபோல் வெளியே சொல்ல முடியாமல், உள்ளுக்கும் விழுங்க முடியாமல் பற்கடிப்பு நேரங்கள் இனி எத்தனையோ?

ஆனால் மறுநாள் காலை இத்தனை வேதனைகளையும், நடராஜன், தீrதருடனான சந்திப்பு ஈடுபண்ணி விட்டது. வங்கி உத்யோகத்திலிருந்து தென்காசியில் நான் ஒய்வு பெற்று இருபத்தி நான்கு வருடங்களுக்குப் பின் இப்பத்தான் ஹாம்!

ஆனால் நடராஜனும் ஒய்ந்து போய்விட்டார் (டி.கே.சி.யின் பேரன்) இந்த அளவுக்கு ஒய்ந்து போகும் வயதல்ல. கண்கள் லேசாய்க் குழிந்து, மூக்கு நீண்டுவிட்டது. காலத்துக்கே பழிவாங்கும் தன்மை இருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது எப்பவுமே பொருந்தும் என்பதில்லை. முற்பகல் செய்திருக்கவேண்டாம். காலத்தைப் பொறுத்தவரை வாழ்வதே வினைதான். காலமென்று இருக்கிறதோ? இந்தக் கேள்வி, வேறு கேள்விகள், வேறு சர்ச்சைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

தோன்று மலர் வாழ், வதங்கு விழு-இந்த நியதிக்குத் தான் காலம் என்றும் வினை என்றும் பெயர் வைத்து, அதன்மேல் பழியையும் கூட்டிவிட்டோம். மனிதன் எதற்குமே பொறுப்பேற்க விரும்புவதில்லை. காலம் தோன்றியதே இப்படித்தானோ. வரலாற்றின் மறுபெயர்தானே காலம்! அதன் இரக்கமற்ற தீவிர நடை! Time marches on.

முதன் முதலாக நாங்கள் சந்தித்துக் கொண்டபோது மனுஷன் எப்படியிருந்தான்? இருக்கையினின்று எழுந்து நின்று இரண்டடி முன் வந்து இரு கைகளையும் கூப்பிக் கொண்டு தலைவணங்கி நமஸ்காரம்.'