பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 99

அங்க அசைவுகளில் ஒரு அமைதி, மெளனம், முகத்தின் செதுக்கல் எல்லாம் சிற்பவாகு. அந்த குடும்பத்தினருக்கே ஒரு மேன்மக்கள் பண்பு, பேச்சிலும், செயலிலும் உண்டு; அதை விரல் வைத்துக் காட்ட முடியாது.

இத்தனை நாள் கழித்து சந்தித்ததன் விசாரிப்புகளும் (யார் இருக்கிறார்கள் யார் காலமானார்கள் சேர்த்து) ஒருவாறு கட்டுப்பாட்டுக்கு வந்தபின் தீக்ஷதர் மெதுவான, அளந்த குரலில் ஏதோ ஆரம்பித்தார்.

“நான் குற்றாலத்தில் காப்பிக்கடை வைத்திருந்தபோது நடராஜன் உங்களை அழைத்து வந்தான். நம் முதல் சந்திப்பு அப்பத்தான். ஆனால் உங்கள் எழுத்து மூலம் உங்களை ஏற்கெனவே அறிவோம். தவிர உங்கள் ஆபீஸ் nதாரமய்யர் எனக்கு பந்து. உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அன்று அமாவாசை தர்ப்பணத்தை நீங்கள் அருவியில் பண்ணினர்கள்.

ஒன்றைத் தொட்டு ஒன்று ஞாபகம் வருகிறது. அன்று நான் உங்களுக்கு அமாவாசை அதிதி. மாமி கீரையை அப்படி அற்புதமாக மசித்திருந்தாள்.

“அது கிடக்கட்டும்-” “காப்பிக்கடை என்றீர்கள். கடையும் அதுதான். நீங்கள் குடித்தனம் பண்ணின இடமும் அதுதான். மூன்று பசங்கள். படிக்கும் பசங்கள். பத்துக்கெட்டு இருக்குமா?

“அருவியை நம்பிப் பிழைப்பவர் எல்லார் பாடும் அப்படித்தான். அது ஒரு காலம். அதுவும் சரியாய்த்தா னிருந்தது. இப்ப விடும் வாசலும் கையில் ரொக்கத்தோடும் இல்லையா? பையன்கள் தலையெடுத்து விட்டார்கள். குடியும் குடித்தனமுமாய் அவனவனிடத்தில் செளக்யமா யிருக்கிறான்கள். பிரியமாயிருக்கிறான்கள். நல்லது