பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感

லா. ச. ராமாமிருதம் * 101

காட்டினாலும் அது காலத்துக்குக் கட்டுப்பட்டது அன்று. It is the eternal fountain of life. splifts &afégjib நித்ய யெளவ்வனி. அருவி அவளின் யெளவனத்தால் புதுப்பிக்கப்படுகிறதா? அல்லது அவள் அருவியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறாளா? இந்தக் கேள்வியின் வசியம் மனம் தன்னை இழந்து காலத்துக்கும் அதில் திளைத்துக் கொண்டிருக்க முடியும் ஆசை என்னுடையது. ஆனால் அருள் அவளுடையது. ஒவ்வொரு நொடியும் அவளுடையது என்று அறியும் நேரம் இது. நடராஜன் குரல் எங்கிருந்தோ வருகிறது. “நாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து அருவியில் பரம்பரையாக ஸ்நானம் செய்திட்டிருக்கோம், ஆனால் எங்களுக்கு இப்படித் தோணல்லையே!

ஒன்றையொன்று தொட்டுத்தான் எண்ணங்கள் தொடர்கின்றன. அவ்வப்போது அவை வண்ணம் மாறிக் கொண்டு இருக்கின்றன. இந்த ஓயாத இயக்கமே இவ்வுலகம். பார்க்கப்புகின் நாமே எண்ணங்கள்தாம். எண்ணத்தின் விளைவுகள். எண்ணங்களின் ஸ்துாலங்கள். எண்ணம் ஸ்துாலத்துக்குக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் வேளை வரும்வரை etherல் நீந்திக் கொண்டிருக்கிறது.

தெய்வம் இருக்கிறதா? இல்லையா? இந்தக் கேள்வியில் அவஸ்தைபட்டுக் கொண்டிருப்பானேன்? உன் எண்ணம் தோற்றுவித்த இந்த உருவகத்தை- அருவியில் ஸ்நானம் செய்து கொண்டிருப்பவளை நம்பேன். உன் எண்ணம் அது. உன் உருவகம் தோன்றி விட்டது. அதை என்ன செய்யப் போகிறாய்? உன்னால் அதை அழிக்க முடியுமா? அவள் ஜனனி.