பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

லா, ச. ராமாமிருதம் * 103

அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் உண்ணாமுலையம்மன்.' இட்டு அழைக்கும் வழக்கில் பெயர், 'அபிதாவாய்க் குறுகியபின், அபிதா = உண்ணா. இந்தப் பதம் தரும் பொருளின் விஸ்தரிப்பில், கற்பனையின் உரிமையில், அபிதா = ஸ்பரிசிக்காத, “ஸ்பரிசிக்க இயலாத" என்கிற அர்த்தத்தை நானே வரவழைத்துக் கொண்டேன். நாங்கள் தற்செயலாகக்கூட ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டதில்லை. தொட முயற்சித்ததுமில்லை. அபிதாதான் விசாலமா? விசாலம் அபிதாவா? இது வீட்டுக்குள்ளும் குறுகிய நண்பர் வட்டத்திலும் எல்லாருக்கும் தெரிந்த ரகசியம். அபிதா என்னும் நாவலின் சாராம்ஸ்மும், நடையின் செழிப்பும் என் பாணியின் உச்சக்கட்டமாய் அமைந்து இன்னும் பேசப்படுகிறது. அது எவ்வாறு வைத்திக்கும் விசாலத்திற்கும் பட்டிருக்கும்? அதுவும் அவரவருக்குத் தோன்றின விஷயம். விசாலாட்சி ஒன்று சொன்னாள்: “குருக்கள் ஜாதி வாழ்க்கையை அப்படியே படம் புடிச்சிருக்கீங்களே!”

அபிதா, விசாலி, விசாலம், வைசாலி எல்லாம் ஒரே நாமம்தான்.

äg 爵毯 洪

நாளை பொறுத்து தீவாளி. சேகர் இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே வந்தாச்சு கண்ணன் இன்று காலை வந்து இறங்கி இன்னும் இரண்டு மணிநேரம் கூட ஆகவில்லை. மூத்தவன் நாளை வந்தாலும் வரலாம். அவனைப்பற்றி நிச்சயம் சொல்லமுடியாது. பெண்ணரசி இன்று பிற்பகல் மூன்று மணிக்குத்தான் வருவாள். இன்னும் முன்னாலேயே வருவதற்கு அவளுக்கு இஷ்டம்தான். எங்களுக்கும்தான். ஆனால் அவள் மகள் கோட்டி'யை யார், எப்படி