பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 & செளந்தர்ய.

சமாளிப்பது? அப்படி ஒரு விஷமம். இன்றுதான் ஹைமாவதி பrணக்கடை ஆரம்பிப்பதாக இருக்கிறாள். எண்ணெய்க்கடாயில் கோட்டி கையை வைத்துவிட்டால்? நினைத்தாலே உடல் குலுங்குகிறது. அவன் ராகrசன். என்ன வேனுமானாலும் செய்வான். ஆம்பிலேறித் தோம்பில் குதித்து, காஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் NO, No, No.

நானும் ஹைமாவதியும் கூடத்தில் கட்டிலில் உட்கார்ந் திருக்கிறோம். அவள் பாடு ஜகா வாங்கும். ஆனாலும் ஏதேனும் காரணமாகக் குடும்பம் கூடுகிறதென்றால் தனி சந்தோஷம்தான். இதுமாதிரி ஒவ்வொரு தீபாவளியும் நேருகிறதா? இந்தத் தடவை என் பிறந்தநாள். அடுத்த இரண்டாம் நாள் தீபாவளி.

வரட்டும். வரட்டும். எல்லோரும் வரட்டும். இந்தக் கூடம் இன்னும் எட்டுபேர் வந்தாலும் தாங்கும். முன்னாலிருந்த வீடு போலில்லை. அங்கு விருந்தாளி, ஏன் என் மகனே வந்தால் கூட ஐயோ ஏன் என்று தோன்றும். எதிருக்கெதிர் முகம் இடித்துக் கொண்டு. ஆனால் இங்கு இடம், பொழுது, சந்தர்ப்பம் எல்லாம் சரியாய்த்தானே அமைந்திருக்கிறது! அடுத்த தடவை எனக்கு எப்படியோ?

கண்ணன் என் எண்ணத்தையே படிப்பதைப்போல் "அப்பா, அன்று அன்று வாழ்கிறோமா பாருங்கள். அப்பா நமக்கென்ன குறைச்சல்? உங்களுக்குத்தான் என்ன குறைச்சல்?”

ஷோபா சொன்னாள்: "அப்பா, எங்களுக்குத் தீபாவளி முக்கியமில்லை. அக்டோபர் 30தான் முக்கியம். இந்தத் தடவை அத்துடன் தீபாவளியும் சேர்ந்திருக்கிறது. அவ்வளவு தான். நானும் அவரும் அஞ்சு நாள் loss ofpay. பாப்புவுக்கு அஞ்சுநாள் கிளாஸ் போச்சு. பாடங்களை ஒடிப்பிடிச்சுடு