பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 105

வாள். அது பத்திக் கவலை இல்லை. எல்லாம் தெரிஞ்சுதான் செய்யறோம். We are also happy. இன்று முருகன் கோயிலில் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் வந்து அங்கு கால்வலிக்க நின்று கொண்டிருக்க வேண்டாம். ஆட்டோவில் தீபாராதனை சமயத்துக்கு

"யாரப்பா? ஹைமாவதி எழுந்து வாசலுக்குச் சென்றாள். வேற்றுக்குரல் கேட்டுக் கண்ணனும் சென்றான். எனக்குக் காது டமாரம். சேகரின் குரலும் கேட்கிறது. அவன் எப்போ போனான்?

அவள் உள்ளே வந்து மறுபடியும் கட்டிலில் உட்கார்ந்தாள். கண்ணனும் சேகரும் உள்ளே வரவில்லை. வெளியே நின்றபடி கிசுமுசு.

“என்ன ரகளை?” என்றேன். “எல்லாம் உங்களைப்பத்தித்தான்.” “இப்போ நான் என்ன செஞ்சேன்?” "தந்தி-”

“தந்தியா 2” “தந்திதான். விசாலாட்சி. வைத்தி குருக்கள் ஆம்படை." “என்னது? ஹா-” என்னை அறியாமல் கை என் மாரைப் பிடித்துக் கொண்டது.

“அதுக்குத்தான் சொன்னேன்”- ஹைமாவதி என் தோளைப் பிடித்தாள். "இதுமாதிரி உங்க உடம்பை ஏதேனும் பண்ணிப்பேளேன்னு. நல்ல நாளும் கிழமையுமதுவுமாய். அவாளவாள் வேளைன்னு இருக்கே அவளுக்கும் வயசாச்சு. நீங்கள் அவளைப்பத்தித் தனி புஸ்தகமே எழுதிட்டேள்.