பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 & செளந்தர்ய.

அதுக்கும் மேல் நீங்க என்ன செய்ய முடியும்? அவளும் பழுத்த சுமங்கலியாய்ப் போனாள். அதுக்கும் மேல் அவளும் தான் என்ன செய்ய முடியும்?”

நான் எழுந்து சற்று நின்றேன். இப்போதெல்லாம் காலுக்கு உடனே தீர்மானம் கிடையாது. மெல்ல நடந்து என் அறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்துவிட்டேன். உடம்பு உள்ளுக்கும் உள்ளே உதறிற்று.

சேகர் உள்ளே வந்து நாற்காலியில் என் எதிரே அமர்ந்தான். அவன் பக்கலில் கண்ணன் மார்மேல் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான்.

"அப்பா சேகரின் குரல் மெதுவாய், ம்ருதுவாய் என் மேல் ஒற்றிற்று. சேகர் சுபாவமே ம்ருதுவான குரல். அவன் தன்மையை ஒத்து.

"அப்பா உங்கள் கஷ்டம் எங்களுக்குப் புரிகிறது. உங்கள் துக்கம் இரண்டு பங்கு ஒண்னு அபிதாவை இழந்தீர்கள்; இன்னொண்ணு பழகிய பங்கு இருக்கில்லையா? இது இரண்டையும் தவிர உங்களுடைய personal tragedy ஒண்ணு இருக்கே! நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்குத் தெரியாததா? Person to person. அதை யாரும் ஒண்னும் செய்யமுடியாது. உங்கள் tragedyஐ நீங்கள்தான் சந்திக்கணும். சமாளிக்கணும். அதில் புகுவதற்கு எங்களுக்குத் தகுதி யில்லை. அது அவனவன் காடு, அவனே திசை தப்பிவிடும் காடு, ஆனால் அப்பா- நீங்கள் எங்களுக்கு வேணும்.”

கண்ணன், “என்னால் முடிந்தது உங்களுக்கு பதிலாக, ஐயன்பேட்டை போய் வருகிறேன். இன்னி சாயந்தரமே திரும்பி விடலாம்.”

கண்ணன் சொன்ன கையுடன் கிளம்பிப் போய் விட்டான்.