பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

லா. ச. ராமாமிருதம் : 9

"பேப்பரில் ஃபோட்டோ பார்த்திருக்கிறேன். கலைமகளில் கதை படித்திருக்கிறேன். இப்படி எங்கள் சகவாசம் ஆரம்பமாயிற்று. பேச்சுவாக்கில் சொன்னார், "இட்லி நாற்பது பைசா. தோசை எழுபத்தி அஞ்சுபைசா.” இரண்டு இட்லி சாப்பிட்டபிறகு தோசை வார்த்துப் போடச் சொன்னேன். அவர் போன சுருக்கில் திரும்பி வந்து கண்ணைச் சிமிட்டியபடி 'மாமிக்கு மூட் அவுட் ரெண்டு இட்லி வைக்கவா? மாவு என்னவோ ஒண்ணுதான்.”

சில நாட்கள் கழித்து படிப்படியாய் எங்கள் தொடர்பு மெதுவாய் நின்றுபோய் ஏனோ தெரியவில்லை ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. போகப்போக எனக்கு ஒடுக்கம் தானே. அப்புறம் ஒருநாள் மராத்தி இட்லி (அவர்கள் மராட்டியர்கள் அதனால் மராட்டி இட்லி) கடைக்குச் சென்றேன். இப்போது இடம் பழைய மாதிரி அடக்கமாக இல்லை. வியாபாரம் பலத்து விட்டது. இட்லிப் பானைகள் மேஜை அருகிலேயே வந்துவிட்டன. மசால் வடை கடாயில் வேகிறது. அவருடைய இரண்டு பெண்களும் பண்டங்களைத் தயாரிப்பதிலும் பரிமாறுவதிலும் மும்முரமாக இருக் கிறார்கள். மகன் ஒத்தாசையாக இருக்கிறான்.

என்னால் படியேறி அதற்கு மேல் மேடையிலிருந்த மேஜைக்குப் போக சக்தியில்லை. "நான் படியிலேயே உட்கார்ந்துக்கட்டுமா?” மாமியைக் கேட்டேன்.

"தாராளமா அப்படியே செய்யுங்கோளேன்.” இட்லி உபசரித்தாள். பையனைக் கேட்டேன், ‘ஏம்பா நீதானே மின்ட் தெருவுல ஒரு குடோன்ல வேலை செய்கிறாய்?”

“நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே!” “இப்போ அங்கே இல்லையா?” "இருக்கிறேன். ஆனால் போகும் வரை இங்கே உதவுகிறேன்.”