பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

భ

லா. ச. ராமாமிருதம் * 特

என்மேல் கேலிப் புன்னகைகள் விழுகின்றன.

'Sight அடிப்பதற்கு வயசு உண்டா என்ன?”- நான் யோசிக்கவில்லை. காத்திருந்தாற்போல் பதில் குதித்து விட்டது.

'கொல்'லென்று சிரிப்பு அலை. ஒரிரு கைத்தட்டலும் கூட சிரிப்பில் பெரிய டாக்டர் குலுங்கினார். அவர் முகம் சிவந்து விட்டது.

“High court ஜட்ஜைக்கூட இந்தக் கேள்வியைக் கேட்டுட்டேன். தடுமாறுறாரு ஏதோ கெளரவம் பாக்கறாங்க. உண்மையை ஒப்புக்க மாட்டேன்கறாரு. Sir, நீங்க தைரியமா சொல்றீங்க”

"தைரியம் என்ன வேண்டியிருக்கு? எங்கள் வயசுல எங்கள் பார்வை வேறு.”

“Oh I know.”

தொடர்கிறேன்- 'இதப்பாருங்க. இங்க நர்ஸ், பேசினை ஏந்திக்கிட்டு நிக்கறாளே, அவள்தான் இங்கு மற்றவங்களைக் காட்டிலும் எனக்கு அழகாய்ப் படுகிறாள்.”

எல்லோர் பார்வையும் அவள்மேல் திரும்பியது, அப்போத்தான் அவளைப் புதியதாய் பார்ப்பது போல். அவள் கன்னங்களில் நாவல் பழச் சிவப்பு ஏறிற்று.

L_stol fr, “Sure, sure!”

எங்கள் பேச்சு அப்புறம் விஷயம் மாறிவிட்டது. எனக்குச் செய்ய வேண்டிய பரிசோதனைகளைப்பற்றி சிப்பந்திகளுக்கு எனக்குப் புரியாத பாஷையில், சரியாகக் கேட்காத அடங்கிய குரலில் சொல்லிவிட்டு, கோஷ்டி அடுத்த படுக்கைக்கு நகர்ந்தது.