பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j4 శ செளந்தர்ய.

கொஞ்ச நேரம் கழித்து, அந்த நர்ஸ் எனக்கு மாத்திரைகள் கொடுக்க வந்தாள். எந்த ஆஸ்பத்திரியிலும் நர்ஸ்கள் இடையிடையே வந்து போய்க் கொண்டு இருப்பார்கள். திடமாத்திரை வழங்க, ஜூரமானியை வாயில் செருக, ரத்த அழுத்தம் அளக்க, சில சமயங்களில் இடுப்பில் ஊசிபோட, அவர்கள் ருட்டீன் ஒன்று தனியாக நடந்து கொண்டிருக்கும்.

அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். உடனேயே அவள் விழிகள் நிறைந்தன. கண்ணிரை விரலால் சுண்டி விட்டு உடனே போய்விட்டாள். நன்றியா? உள்ளே என்ன சோகமோ? கறுப்பாய் பிறந்துவிட்டால் இளக்காரமா? கறுப்பில் அழகில்லையா? அவள் முகத்தை என் தோளில் சாய்த்துக் கொள்ளும் வயதுதான். ஆனால் அது முடியுமா?

இதுவும் செளந்தர்ய உபாசனைதான்.

எண்ணி, எண்ணத்திலிருந்து செயல் விளைந்து, அந்தக் கட்டத்தில் அது நின்றோ முடிந்தோ விட்டபின் அதனுடைய தீர்க்கத்துக்கு ஏற்றவாறு மீண்டும் நினைவில் அதைப் பின்னோக்குகையில்தான் அதன் காவியம் தனியாகத் துளிர் விடுகிறது. அது தனி தடம். உலகமே கூட, ஸ்துலம் அருவருப்பாய்க்கூட இருக்கிறது. உதாரணமாய் என் சகோதரி ஒருமாதம் படுக்கையில் கிடந்து இறந்துபோன போது- உடலை எடுத்துச் செல்லும்வரை- பின்னரும் நடந்த ஈமச்சடங்குகளைச் செய்யவோ- நான்தான் செய்தேன்அவைகளின் கொடுமையும் அருவருப்பும் தனிமுறை யிலேயே சஹிக்கமுடியவில்லை. ஆனால் இந்த மகத்தான விபத்து நாள்கணக்கில் பிறகு வருடக்கணக்கில் ஊனா ஊனா என் தங்கை மரணத்தை எவ்வளவு தைர்யமாகத்