பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 17

திற்கும் அதன் செளந்தர்யத்துக்கும் எது ஈடாகும்? அதுவே சந்நிதானம்.

‘In the begining there was God, the word and the holy spirit.”

நினைவு தோன்றியமுதல் இந்த வழக்கே செளந்தர்யத் தின் விளம்பல்தானே? திரும்பத்திரும்ப அலுக்காதவரை திரும்பத் திரும்ப செளந்தர்யத்தின் சாயைகளில் இதுவும் ஒன்றோ?

செளந்தர்ய. முற்றுப் பெறாத தேடல், செளந்தர்யா எனில் முழுமை.

ஆனால் உண்மை செளந்தர்ய.

வயதின் நீண்ட நினைவுச்சரடில் பாத்திரங்கள் பவனி வருகின்றன. இதோ மாசு தென்படுகிறார். அட எப்படி இப்போது இங்கே? மாசு என் ஹநுமன். நான் அவருக்குத் தகுதியான இராமனோ இல்லையோ,

ஹநுமனை இராமாயணத்தின் இரத்தினக்கண்டி என்று வால்மீகி சொல்கிறார். ஹநுமத் ப்ரபாவத்துக்கென்றே ஒரு காண்டம் ஒதுக்கப்பட்டிருக்கிறது- சுந்தர. செளந்தர்ய.

ஹநுமனுக்கும் ராமனுக்கும் இடைஉறவு எனக்கு இன்னும் தீராத வியப்பு. அது நட்பா? காதலா? பக்தியா? ம்.ஹாம். தலையை உதறிக்கொள்கிறேன். நட்பு காதலினும் உயர்ந்தது. தன்னலமற்றது. தானிழைக்கும் உதவிக்கு பிரதியுதவி எதிர்பாராதது. மதிப்பிட முடியாதது. நட்பு நட்புக்கென்றே.