பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 24

நடந்து, இரும்புப்பாலம் தாண்டி- முழுநிலா தேய்வது என்பது கிராமத்தை விட்டு அத்தனை நாள் கழித்து அன்று தான் கண்டேன். லேசான இருள்கலந்த வெண்மையின் வெளிச்சம். நிலவு சூரியனிடமிருந்து கடன் வாங்கிய வெளிச்சம். எப்படியிருந்தால் என்ன? வானத்தின் முழு நீளத்தை வெற்றியுடன் சவாரி செய்கிறான். அவன் குளுமையில் எங்கள் இதயம், பேச்சு மலர்ந்தன. ஆமாம். என்ன பேசினோம்? உலகில் எங்களுக்குத் தோன்றியவை எல்லாவற்றைப் பற்றியும்தான் பேசினோம். சினிமா, சங்கீதம், திவ்யப்ரபந்தம், காந்தி, நேரு, செய்கல், துனியா ரங்க ரங்கே, விசிஷ்டாத்வைதம், தேவதாஸ்- இப்படி ஏதேதோ அந்த நள்ளிரவில், அந்த மர்ம இருளில் ஏதேதோ பலகணிகள் திறக்கும். சில ஆச்சர்யமாயிருக்கும். சில பயம்மாயிருக்கும். அப்படியே திரும்பி பாலம் ஏறி கோட்டை ஸ்டேஷன்மேலும் நட- நடப்பதாகத் தெரிந்தால்தானே வேறு உலகில் தானே இருக்கிறோம். கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் மார்வாரிப் பெண்கள் இரவின் விடுதலையில் பாவாடை சுழல, கொலுசு கிலுகிலுக்க கோலாட்டம் ஆடுகிறார்கள். பிருந்தாவனத்துள் நுழைந்துவிட்டோம். பிறகு மனமில்லாமல் பிரிந்து மார்வாடி கடைக்குள் நுழைந்து பூரி, பாஜி, பிரும்மாண்ட வாணலியில் சிவக்க சிவக்க சேறாய் இறுகிக் கொண்டிருக்கும் பால் அதன்மேல் ஏடு (மலாய் மலாய்). மறுபடியும் வந்த வழியே மீண்டு வார்மெமோரியல், கடற் கரைச்சாலை, திருவல்லிக்கேணி என் வீட்டருகே ஒரு ஆயக்கால் போட்டு- மனமில்லாமல் பிரிந்து

மறுநாள் வேலைக்குப் போகவேண்டும். அக்கிரமம்ஆனால் அற்புதம். மாசு.

செளந்தர்ய காண்டம் 蕊