பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 23

யாசிரியரும் கூட கிராமத்து போஸ்ட் மாஸ்டரும் அவரே. எனக்குத் தனி வாத்தியார். அந்த நொந்த உடம்பில் எத்தனை மூர்த்தங்கள் ஏற்றார். கிராமத்தில் மொத்தம் 500 வீடுகள் இருக்கலாம். அதில் நாலு குருக்கள் வீடு. அதுவே அந்த ஊருக்கு அக்ரஹாரம். கிராமத்தின் முக்கியத் தொழில் நெசவு, குயவர் தெருவில் மொத்தம் ஒன்பது வீடுகள்தாம். கோடிவிடு எங்களது. பெரிய வாசல் குறடு. உள்ளே பெரிய முற்றம். ஒரே ஒரு அறை. அறையின் பக்கத்தில் இரு சுவர்கள் தடுக்கப்பட்டு சமையலறை. மிச்சமெல்லாம் கூடம். இரவில் ஒடுவழி முற்றத்தில் கள்ளன் இறங்கினால்- கடவுள் எங்களை ரட்சிக்கட்டும். மாதம் இரண்டு ரூபாய் வாடகையில் அங்கு கழித்தோம்.

கோடைமழையில் முற்றம் மிதக்கும். மழைக்கால, ஒயாத தூறலில் சிணுங்கும். நள்ளிரவில் இடி ஒட்டின் மேல் நொறுங்குகையில் அம்மா எங்களை அணைத்துக் கொண்டு 'அர்ச்சுனபற்குணக்ரீடி சொல்லிக் கொண்டிருப்பாள். அப்பாக்கு மட்டும் எப்படி இந்த ஆழ்ந்த துக்கம். ஜகன் மாதா இப்படித்தான் நம்மை அணைத்துக் கொள்கிறாளோ? அதேசமயத்தில் இடம் காலம் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு firy landல் இருப்பதுபோலத் தோன்றும். இது முழு நிஜமும் அல்ல. ஆனால் பொய்யுமல்ல. மக்கள் நேர்மை யானவர்கள். படிப்பு இல்லை. ஆனால் வாழ்க்கை ஞானம் அவர்களின் ஊடே பிறந்து இருந்தது. கள்ளங்கபடமற்ற வர்கள். ஆனால் அவர்களை ஏமாற்றிவிட முடியாது. விசுவாசமிக்கவர்கள். பையன்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் படுமக்குகள். அவர்களுக்குப் படிப்பு வரவில்லை. படிப்பை தேவையாக நினைக்கவுமில்லை. பானை செய்தல் பரம்பரைத் தொழில். ஆனால் அதைவிட முக்கியம் அவர்களுக்கு விவசாயம்.