பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 * செளந்தர்ய.

பொங்கல் சீசனின் போது அவர்களுக்கு பானை செய்ய நேரம் பத்தாது. இரவு இரண்டு மூன்று மணிவரை லொட்டு லொட்டு. எங்களுக்குத் தூக்கம் போய்விட்டாலும் மூடிய விழிகளின் அடியே அச்சத்தம் மெத்துமெத்தென ஒர் இசை பாடும். அந்தந்தத் தொழிலில் அதனதன் கஷ்டமும், சோதனைகளில் தத்துவமும் அடங்கியிருக்கிறது. களி மண்ணை எங்கிருந்து கொண்டு வருவார்களோ, எதையும் காசு கொடுத்து வாங்கிவிட மாட்டார்கள். காசு அவர்களிடம் இல்லை. காசு அவர்கள் கொள்கையும் இல்லை. தண்ணிர் விட்டு சேறைச் சக்கரத்துக்குப் பதமாகும்வரை மிதிப்பார்கள். வெகு ஜாக்கிரதையாகப் பொடிக்கற்களைத் தேடி எடுத்து விலக்குவார்கள். சேறு உரிய பதத்தில் இறுகியபின் சக்கரத்தின் நடுவில் ஏற்றி சக்கரத்தைச் சுற்றுவார்கள். சக்கரம் சுற்றிக் குயவன் கைகளிடையே பானை அதன் மூல உருவில் எழுவதைப் பார்ப்பதே எனக்கு அலுக்காத ஆச்சர்யம். அதை அறுத்துத் தரையில் வைக்கும்போது அடிப் பாகம் திறந்துதான் இருக்கும். அப்புறம் லொட்டு லொட்டு.

நாலுவித லொட்டுக்கள் அப்படி லொட்ட நாலுவிதக் கட்டைகள். மண்ணை இழுத்துத் தட்டி இழுத்துத் தட்டி அடிப்பாகத்தை மூடுவார்கள். அதிகப்படி மண்ணைக் கிள்ளி எறிவார்கள். படிப்படியான தட்டலில் பானையின் ஈரம் படிப்படியாகக் குறைந்து காய்ந்து நாம் கடைசியாகப் பார்க்கும் அதன் உருவத்தை அடையும் வரை லொட்டு லொட்டு தட்டு தட்டு நாதுக்கு. நாதுக்கு அந்த ஒசையில் ஒரு சுகபாவம் சுகானுபவம். இந்த நுட்பங்களை எத்தனை தடவை விஸ்தரித்தாலும் படிப்பில் பாய்ச்ச முடியாது. கேள். அனுபவி ஆச்சர்யப்படு.

பிறகு துளை. அழகாகப் பானைகளை அடுக்கி மேலே வைக்கோலைப் போர்த்தி வைக்கோல் மேல் சேறு பூசி பற்ற