பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

லா. ச. ராமாமிருதம் * 27

நானிருந்த இடத்தில் வேட்டி நெய்யவில்லை. கைலி தான். கட்டானுக்குக் கட்டான் கண்ணாலேயே அளந்து நெய்ப்பாரும் உண்டு. அனுபவம் இல்லாதவர் குச்சியை வைத்து அளப்பார்கள். பேச்சில் கவனம் போச்சு என்றால் குறுக்கே ஏதேனும் நூல் அறுந்தால்- கரணம் தப்பினால் மரணம். அதனால் இந்தத் தொழிலில் மெளனம் அவசியம். அந்த அவசியமே அதன் அலங்காரம்.

இப்படித்தான் குறுக்கே நாடா பாய்ச்சிக் கொண்டு ஒவ்வொரு வீச்சுக்குமிடையே ஒவ்வொரு குறளாய் நெய்து ஐந்தாம் வேதம் உருவாகியிருக்கும். என் செளந்தர்ய உபாசனை இப்படித்தான்.

தவங்கிடந்து தேடிச் செல்லும் தரிசனத்தை விட தற்செயலில் தன்னைக் காட்டிக்கொள்ளும் பிரத்யட்சம்தான் மகத்தானது. நம்மிடம் அது ஏமாந்துபோய் அதன் சுயரூபம் தோலுரிந்து போய்விட்டதால் நாமே ஆச்சர்யப்படுமாறு அந்தத் தாக்கம் நம்மைக் காலை வாரிவிடும். இது நம்முடைய குறையே ஒழிய அழகுக்குப் பழுதே கிடையாது. அதன் நிரந்தரத்தை நாம் உணராததை அம்பலப்படுத்துகிறது. அந்த சமயம் ஆண்பெண் உறவில்தான் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று இல்லை. இதற்கு சென்றுபோன பக்கங்களில் நீங்கள் படித்த மாசு'விற்கும் எனக்கும் இடை உறவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. Domon and Pythias, கர்ணன்-துரியோதனன், அர்ச்சுனன்-கிருஷ்ணன் காவியங்கள் இப்போதும் நம் கண் எதிரிலேயே நமக்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காணக் கண் இருந்தால், நுகர நுட்பமான உணர்வு இருந்தால் ஸ்தோத்திரப்ரியாயனமஹாலலிதா ஸஹஸ்வரநாமத்தில் இப்படி நாமம் வருகிறது. அதாவது தெய்வம் நமக்கு எப்படித் தேவையோ அப்படி