பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 29

உண்டுதான். ஆனால் இது என்ன தத்துப்பித்து.” பதில் சொல்ல இயலாமல் விழிப்பேன். பீஷ்மன் தொடுத்த சரமழையில் வானமே இருண்டதாம். அதுபோல் இந்த சொல் ஈசல் கூட்டத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். பிறகு நான் முதிரமுதிர அவை அவை தம் தம் இடத்தினைக் கண்டு கொண்டு அங்கு பதிந்து விட்டன என்றுதான் கொள்ளவேண்டும்.

என் பேரக்குட்டி இன்னும் ஐந்து நிரம்பவில்லை. திடீர்திடீர் என சுவர்மேல் கோபித்துக் கொள்கிறான். “டேய் என்னடா நெனைச்சுண்டிருக்கே. நிறுத்து. டீச்சர்கிட்டே சொல்லிவிடுவேன். கீதா டீச்சர்கிட்டே சொல்லிவிடுவேன் ஆமாம். அவன் புருவங்கள் நெரிகின்றன. உதடுகள் மொக்கு கட்டுகின்றன. அழகாயிருக்கிறான். நான் சந்தோஷத்தில் ஆழ்கிறேன். அவன் வரையில் அவன் கோபம் நிஜம்.

"நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். உங்கள் உளறல்கள் எனக்கு மழலைகள். நான் சந்தோஷப்படாமல் எப்படி இருப்பேன்?”

அவள் புன்முறுவலை நம் மழலையில் பார்க்க முடிய வில்லையா?

உவமானங்களும், உபமேயங்களும், உருவங்களும், உருவகங்களுமாய் நாம் பாஷையில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். பாஷை நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த அம்சமே இல்லாது எந்த நாட்டிலுமே எந்த பாஷையுமே ஏது?

உதாரணங்களாக"உனக்கென்னடா ராஜாமாதிரி இருக்கே?"

& 。 2 - - 5 § இது வயறா? வண்ணான் தாழியா?