பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«»

லா. ச. ராமாமிருதம் * 33

என் கற்பனைவழி மடையுடைந்த காட்டாறு போல் அன்று கண்ணிரின் தாரை போன்று மெதுவாக அதன் வழியில் வழிவது- ரிஷிகேசத்தில் சிவானந்தா ஆஸ்ரமத்துக்கு சிற்றருவிகள் இம்மாதிரி ஒடுகின்றன. பாறை உச்சியிலிருந்து ஒரு வெள்ளி ஜரிகை நாடா தன் இஷ்டத் திற்குக் கிளை பிரிந்து ஆங்காங்கே கோலம் இழைத்துக் கொண்டு ஸ்படிகம் வழிகிறது. பாறை உச்சியின் குறுகிய விளிம்பில் தன் அச்சமற்ற அப்பாவித்தனத்தில் ஒரு மான்குட்டி நின்றுகொண்டு அடிவாரத்தில் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதனால் இந்த மானை சாது என்று சொல்லிவிட முடியுமா? இது ஒரு இன்ப வியப்பு. என் கற்பனையின் தன்மை மெதுவானது. ஆனால் அழுத்தம் என்று நினைக்கிறேன். ஒயாமல் எழுதும் பழக்கத்திற்கு அதன் தன்மையிலேயே கட்டுப்பட்டதால் வேறு எப்படியும் இருக்க முடியவில்லை GT Görgy GST Görpfeßpg/. “Słowness is beauty”.- Rodin சொல்கிறான். என் உளியின் உழைப்பில் இதனால்தான் அதிகம் தேசல் காணவில்லையோ என்னவோ?