பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 : செளந்தர்ய.

"நீ ஒண்னும் அப்படித் தெம்பாத் தெரியலையே விசாலம்.”

"பாதம் அப்பமா விங்கிக்குது. வைத்தியன் உப்பைத் தள்ளச் சொல்றான். நான் ஒருவேளை சாப்பாடையே தள்ளிட்டேன். அதுவும் எனக்கு ஒத்துப்போச்சு”

“என்ன ஒத்துப்போச்சு ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்க வேண்டியதுதான்.”

“வயசாவல்லே. எனக்கும் எண்பதாச்சு. ஆனாலும் உங்க மாதிரி நான் பாக்கல்லே இப்படியா ஒரு இளைப்பு!”

விசாலம் குட்டை சிவப்பு மரப்பாச்சி. இன்னமும் நிறமும், அழகும் குன்றவில்லை. கடல்பேசும் வட்ட விழிகள். உதடுகள் நல்ல சிவப்பு. வெற்றிலையும் போட்டுக் கொள்கிறாள்.

வைத்தி நல்ல உயரம். அகன்ற மார்பு. குறுகிய புனல் போல இறங்கி குறுகிய இடுப்பு. தொப்பைக்கு- இளம் தொந்திக்குக்கூட இடமில்லை. வயிறு குழைந்து முதுகுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த ஜோடிப் பொருத்தம் ஏறக்குறைய 72 வருடங்களுக்கு மேல் நீண்டாச்சு. முருகக் கடவுள் இன்னும் நீட்டட்டும்.

வைத்தி இரண்டு வருடங்களாக வீட்டுத்திண்ணையில் அடங்கியாச்சு. வடக்குப் பார்த்த வீடு. கோடையில் சஹறிக்க முடியா தஹறிப்பு. திண்ணை பக்கவாட்டில் தட்டிகட்டி ஒரு மெத்தை விரித்து முக்கால் வேளை அங்குதான் வாசம். அவன் 'ஒ' அவர் தனக்குப் பண்ணிக்கொண்டிருக்கும் செளகர்யங்கள் சுவாரஸ்யமானவை. கொஞ்சம் மின்சார வேலையும் அவருக்குத் தெரியும். காது என்னைவிட டமாரம். ஹியரிங் எய்ட் வைத்திருக்கிறார்.