பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 * செளந்தர்ய.

என் முதுகெலும்பு முறிந்தது ஒர் தனிக்கதை. காலை நாலு மணி வேளைக்கு எழுந்து இருட்டில் வழுக்கி அப்படியே மல்லாக்க விழுந்து- உடனே எழுந்திருக்க முடியவில்லை. என்னை பூரீகாந்த் தான் தூக்கினான்.

“என்னைக் கூப்பிடறதுதானே? ஏன் தனியாப் போவானேன்?”

நான் எந்த பதிலும் சொல்லமுடியாது. ஆனால் எழுந்தால், நடந்தால், உட்கார்ந்தால் வலித்தது. ஆனால் பொறுக்கக்கூடிய வலிதான். போகப்போக அதிகரித்தது பொறுக்கவே முடியாமல் டாக்டர் மகேந்திரனிடம் காண்பித்ததில் முதுகு எலும்பில் ஒரு பகுதியில் நொறுங்கி இருந்ததை X-ray காட்டியது. கத்தி வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். அன்று இரவே ஆஸ்பத்திரியில் சேர்ந்தாச்சு பதினொரு நாட்கள் முறிந்த எலும்புடன் வளையவந்திருக்கிறேன். அதுவே ஆச்சர்யம். ஏன் தற்பெருமையும் கூட ஊசி போட்டு அன்று இரவே வலியை நிறுத்தி விட்டார்களா? ஆனால் என் பையன் பின்னால் சொன்னான். அவன் ஒரு கடப்பாறை முழுங்கி, “வயசாச்சு. தாங்கணும். திருப்பிவைக்காமலே Hair line crack கூடணும். ஒரு பத்துநாள் தாண்டித்தான் சொல்ல முடியும். உங்களுக்குக் கெடு வெச்சாச்சு. இக்கட்டான நிலைமை தாண்டியபிறகு சொன்னான். ஆனால் ‘பெட் ரெஸ்ட் என்று ஒரு நிலைமை விதித்தார்களே அதைவிட நரகம் இல்லை. வலப்பக்கம் இடப்பக்கம் பிரளலாம். மற்றபடி மல்லாந்து படுத்தபடியே இருக்கவேண்டும். கட்டிலை என்னவோ முறுக்கித் திருப்பிச் சற்றுத் தாழ வைத்து விட்டார்கள். மற்ற உடல் கடன்களெல்லாம் கட்டிலிலேயே. ரப்பர் ஷிட்டோ வேட்டியோ, போர்வையோ, அசிங்கங்களையும் அதன் நாற்றத்தையும் தாங்கிக்கொண்டு