பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 45

பெண்டாட்டி பார்த்தையா? உள்ளே வாயேன். கல்யாண பட்சrணங்கள் தரேன்.'

இப்படித்தான் எங்கள் முதல் சந்திப்பு. நாலு நாட்களுக்குப் பிறகு குருக்கள் வீட்டிற்குப் போனால் அவள் இல்லை. பிறந்தகத்திற்குப் போய்விட்டாள். இனி பெரியவள் ஆனபிறகுதான் இங்கு வருவாள். நான் பட்டணத்திற்கு சித்தப்பா வீட்டிற்கு பள்ளியில் சேரப் போய்விட்டேன். போட்டிப் பரீட்ஷையில் நான் தேறி, மாதச்சம்பளம் இனி கட்டத் தேவையில்லை. ஆங்கிலத்தில் என் பாண்டியத்யம் வாத்தியார்களையே பிரமிக்க வைத்தது. எட்டாவது வகுப்பில் ஒரு பையன் இருக்கிறான். B.A. இங்கிலீஷ் பேசுகிறான் என்று ஆசிரியர்களிடையே பேசிக்கொள்வார் களாம். S.S.I.C. தேறி நான் பள்ளியை விட்டு வெளியேறும் போது பிரின்சிபல் (ஒரு வெள்ளைக்காரர்) கொடுத்த spargot $603 &nts&sp?giftso “His power of imagination and gift of expression are far above the average” grairs), குறிப்பிட்டிருந்தார். நான் காலேஜ் போகவில்லை. அந்தளவிற்கு கையில் பசையில்லை. படியேறி வேலை தேடுவதிலேயே வீட்டில் என்னை bend எடுத்தார்கள். ஆகையால் ஐயம்பேட்டைக்கு முன்பு போல அடிக்கடி போக முடியவில்லை. வைத்தியைப்பற்றி நினைக்கவே இல்லை. விசாலாட்சியைப்பற்றி நினைக்கத் தோன்றவே இல்லை. குருக்கள் வீடாவது மண்ணாங்கட்டி ஏதேனும் ஒரு வேலையில் அமர்ந்து வீட்டின் நச்சரிப்பிலிருந்து தப்ப வேண்டும். இடையில் ஏறக்குறைய ஒரு மாதம் Kalazaar ஜுரத்தில் கிடந்தேன். பிறகு ஐய்யம்பேட்டையும் பட்டணமு மாக மாறிமாறித் தங்கினேன். அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கு மிடையே ஏதோ சமிஞை அந்த இடைவெளிகளில் ஒருநாள் குருக்கள் வீட்டில் விசாலத்தைப் பார்த்தேன். புக்ககத்திற்கு