பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

லா. ச. ராமாமிருதம் * 5?

“அதுவரையில் நீங்க எங்கே தங்கப் போறிங்க?" பதில் அவள் சொன்னாள். "என் தங்கச்சி வீட்டில். அவள் ஆத்துக்காரர் பெரியகோவிலில் பூஜை செய்யறாரு. வீடு பதினாறு கால் மண்டபத்துக்கு எதிரே. நாம ஆனந்தமா மொட்டை மாடியிலிருந்து சாமி புறப்பாடிலிருந்தே உற்சவம் பார்க்கலாம்.”

“நான் வீட்டுக்குப் போக வேண்டாமா? அவா கவலைப் படுவாளே?”

வைத்தி: 'இன்று ஊர் திரும்பறவாகிட்டே சொல்லி அனுப்பிச்சுடறேன். நாளைக்காலை நான் போய் சொல்ல மாட்டேனா?”

அம்மாவாவது சமாளிச்சுப்பாள். அப்பா இந்த அட்ரஸ் இல்லாத நிலைமையைத் தாங்குவாரா? நெஞ்சுள் எனக்கு சுருக் சுருக். நடந்தது நடந்துவிட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது.

இப்போ போற இடத்தில் அவாளுக்கு என்னைத் தெரியாதே!

அவள், “என்ன உங்கள் இஷ்டத்துக்கு கவலைப் படறிங்க? ஏற்கெனவே உங்களைப் பத்தி நாங்க பேசி இருக்கோமே! நீங்கள் இப்படி அங்கே வருவதை அவங்க கெளரவமா நெனைப்பாங்க. நீங்களே தெரிஞ்சுக்கப் போlங்க. நான் ஏன் சொல்லணும்?”

அவள் விழிகள் டால் அடித்தன. முன் நெற்றி அழுந்த வாரிய கூந்தலில் வங்கி படர்ந்தது.

இதுதான் எங்கள் முதல் பேச்சு. இந்தத் தாக்கத்தைக் காதல் என்று குழப்பிக் கொள்ளா தீர்கள். ஆழ யோசிக்கிறேன். எனக்குக் கிடைத்த பதில்,