பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 & செளந்தர்ய.

எனக்கும் விசாலத்துக்கும் இருந்த பந்தம் காதலே இல்லை. இது ஏதோ இரண்டு ஜீவன்கள் மூலம் கண்டுவிட்ட விவரிக்க முடியாத உறவு. அதன் தீவிரம் அதிகரிக்கவு மில்லை. குறையவுமில்லை. இது திருட்டுத்தனமுமில்லை. இப்படியும் ஒன்று உண்டு என்று அறிந்து கொள்கிறோம். அவ்வளவுதான். சந்தேகத்துக்குரிய விளிம்பில், நாங்கள் பரிமாறிக் கொண்டதில்லை.

இந்த முதல் பேச்சு எங்களுக்கு ஒரு பொக்கிஷம். அதை மனம் தானே தன் பெட்டகத்தில் வைத்து மூடிவிடும். அதன் பத்திரத்தைப்பற்றி கவலையே வேண்டாம். உள்ளே மின்மினி மாதிரி நாம் அறியாமலே ஒளி பூத்துக்கொண்டு இருக்கும். அதனால்தான்- அதற்காகத்தான் ஒருவரில் ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது ஒரு அாசசனை.

நாங்கள் மொட்டைமாடியில் ஏறியாச்சு. விசாலம் என் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறாள். குழந்தை மாதிரி அவள் விழிகள் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றன. ராஜ வீதி விழி பிதுங்குகிறது. அதிர் வேட்டுகளோடு சாமி புறப்பட்டாச்சு. கோவிலின் சொர்க்கவாசல் வழியே உற்சவர் வாகனத்தின் மேல் தோன்றுகையில் மயிர்க்கூச்செறிகிறது. ஆடி அசைந்து வந்து பதினாறுகால் மண்டபத்தில் ஆயக்கால் போடுகிறது. தேங்காய்கள் உடைபடுகின்றன. மாலைகள் சொரிகின்றன. கற்பூர ஹாரத்தி, சுவாமி முகத்துக்கெதிரே காற்றில் 'ஓம்' என்ற பிரணவத்தை எழுதுகிறார். கைலாச நாதருக்கு விசேஷ அலங்காரம். வில்லில் அம்பைப் பூட்டிய வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். விலையுயர்ந்த கற்களில், உலோகங்களில் அந்த அலங்காரத்தில் தகதகக்கின்றன. விசேஷ அலங்காரத்திற்கு தென்னாட்டிலிருந்து எவரையோ வரவழைத்திருக்கிறார்கள்.