பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 * செளந்தர்ய.

விஷ்ணு பின்னால் தங்கி விடுவார். இந்தப் ೬-}!T೯೬೪ಿಜಜ)ಿಸr தொண்டையை அடைக்கும். பிறந்த வீட்டை விட்டு ஹிமவான்புத்ரி ஹைமாவதி பர்வதராஜகுமாரி தன் பதியை சேர்ந்துவிட அவனை நோக்கிச் செல்கிறாள். ஏகாம்பர நாதரும் காமாrயும் சேர்ந்து கோவிலுள் சென்று விடுவார்கள். அவர்கள் போவதைப் பார்த்துவிட்டு விஷ்ணு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டுவிடுவார்.

அன்று இரவே கலியாணமா? அடுத்த நாளா? எனக்கு நினைவில்லை. நான் கலியான உற்சவம் பார்த்த தில்லை.

இப்பவும் நினைக்கையில் மனம் கனக்கிறது. அதில் கஸ்தூரிப் பெட்டி திறந்து ஏதோ நுட்பமான விசனம். அதன் செளந்தர்யம் என் உள்பூரா படருகையில் நான் மணக்கிறேன். மனம் உயர்ந்த தடத்துக்கு ஆசைப்படுகிறது. இந்தப் பாவனைகள், ஆராதனைகள் புராதனத்திலிருந்து நமக்கு உதவ முயற்சிக்கின்றன. ஆனால் யாருக்கும் கிடைக்கும் வாசனைதானே கிடைக்கும். நினைவில் ஊறப்போட்டு உணர்வது தவிர நமக்கு வேறு கிடைக்காது.

என் செயலாவது ஏதுமில்லை. ஈசா யாவும் உன் செயலே. இப்போது புரிகிறதா?

நான் ஐயம்பேட்டை திரும்பியதும் நான் பயந்தமாதிரி அப்பா கோபிக்கவில்லை. உனக்கும் மாறுதல் வேண்டாமா. ஆமாம். நீ இந்த ஸ்டாம்ப் பையில் இருந்து காசு எடுத்தாயா? நாலு ரூபாய் குறைகிறது.

'இல்லையேண்ணா என்னுடைய மறுப்பே என்னைக் காட்டிக் கொடுத்திருக்கும். என்னைக் கொஞ்சநேரம் சிந்தித்த பின் "நான் கேட்கிறதுகூடத் தப்புத்தான். அதுவே ஒட்டை தவறி சில்லறைகள் விழுந்திருக்கும்” என்று தன்