பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 57

பசி கிள்ள ஆரம்பித்துவிட்டது. "விசாலம் ஆடிசன்பேட்டை யில் டிபன் சாப்பிடுவோமா?”

சற்றுத் தயங்கிவிட்டு சொன்னாள்: "எனக்கும் தின்ன ஆசையாயிருக்குது. ஆனால் ஒட்டலில் ஐயன்பேட்டை யிலிருந்து யாராவது நம்மை சேர்ந்து பார்த்துட்டாங்கன்னா வேறே வினையே வேண்டாம். குருக்கள் பெஞ்சாதியை ஒட்டலில் பார்த்தேன். அப்புறம் இவங்க குடும்பம் நம்ம கோவில் பூஜைக்கு எப்படி லாயக்காவாங்க ஆரம்பத்திலே பெரிசாயிருக்காது. ஆனால் இவங்க பொறியை விசிறி விட்டு நெருப்பாக்கி விடறதுலே பொழப்புக்கே வத்தி வெச்சுடுவாங்க வீட்டுக்குப் போனதும் உப்புமா கிளறிட்டாப்

போச்சு.”

ஐயன்பேட்டையிலிருந்து காஞ்சீவரம் போவ, ஐயன் பேட்டை மார்க்கம் வழி பஸ் லேசில் வராது. வந்த பஸ் திணறிக்கொண்டு வரும். அப்படியும் முன்னால் விசாலம் ஏறிவிடுவாள். Service ஆகியிருக்கிறதே!

இனிமேல் வீடு போய் மாலை தொடுத்தாகணும். இரண்டாம் வேளை பூஜைக்குத் தயாராகணும். அப்புறம் சமையல் நைவேத்ய சோறு ஆறிவிடுவதால் குழம்பு, ரஸம் சூடாயிருக்கணும். அவர்களுடைய உழைப்பு காரணமோ, இயல்பிலேயோ நன்றாய்ச் சாப்பிடுவார்கள். நிறைய வைக்கணும். ராச்சாப்பாடு மணி பத்துகூட ஆகிவிடும். ஆனால் அது அவர்களுக்குப் பொருட்டில்லை. பகல் சாப்பாடு கோயில்கள் பூஜை முடிந்து, சோறு வந்த பிறகு ஒருமணிக்குத்தானே! வேளையில்லா நேரங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை பரம்பரையாக. அதுவும் கிராமத்துக் குருக்கள் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் பிழைப்பு இப்படியே படிந்து போய்விட்டது.