பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

இது 'அபிதா' எனும் நாவலின் கதாநாயகி ஆகிய பெண்மணிக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன். கருவூலங்கள் எப்படிப் பிறக்கின்றன என்பது இன்னும் புரியாத வெளிச்சம்தான்.

'செளந்தர்ய ஒரு ஏழை குருக்கள் குடும்பத்தைப் பற்றியது. இப்பொழுது விசாலாட்சியும் மறைந்து விட்டாள். அவளுடைய கணவன் வைத்தியநாத குருக்களும் காலமாகி விட்டார். அவர்களுக்கு சந்ததி கிடையாது. எப்படி வந்தார்களோ அப்படி போய் விட்டார்கள். அவர்கள் வாழ்ந்தவரை அந்த வாழ்க்கை எனக்குக் கவிதையாகவே படுகிறது.

பொதுவான வார்த்தை - அந்த நாளில் இந்த இரண்டு புத்தகங்களில் வாழ்ந்தவர்கள் வெகு நல்லவர்கள். அந்தக் காலமே அப்படி. காசு இல்லாத குறையை, ப்ரியம், மரியாதை, பிராம்மணர் விஸ்வாசம் இதுபோன்ற பிறவிப் பண்புகளால் இட்டு நிரப்பினார்கள். இனி, அந்த மனிதர்களும் வரமாட்டார்கள். அந்தக் காலமும் வராது. நான் அனுபவித்தேன். பாக்கியவானானேன்.

செளந்தர்ய என்ற தலைப்பின் அடிப்படையே இது தான.

F2, ஜெயகிருஷ்ணா அபார்ட்மெண்ட்ஸ் அன்புடன் 18,ಟಣ್ಣpಬ್ಬ டவுன்ஷிப் சாலை 6}鲨。母。 ராமாமிரு தம் அமீபததுTா

சென்னை-600 053 தொலைபேசி-26574840 30-06-04