பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 59

பக்கங்களில், நீங்கள் எனக்கும் மாசுவுக்குமிடையே கண்ட உறவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தாமன்-பிதியஸ், கர்ணன்-துரியோதனன், கிருஷ்ணன்-அர்ச்சுனன், என்று இதிகாசப் புராணங்களில் மட்டும் நேரவில்லை. காவியங்கள் இப்பொழுதும் நம் கண்ணெதிரேயே நிகழ்ந்து கொண்டிருக் கின்றன. காணக் கண் இருந்தால், நுகர நுண்ணுணர்வு காத்திருப்பின்

ஸ்தோத்திரப்ரியாயநம: லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒன்று. அதாவது தெய்வம் நமக்கு எவ்வளவு தேவையோ அப்படி பக்தனும் தெய்வத்துக்குத் தேவைப்படுகிறது. இதற்கு உள்ளர்த்தம் வேறு என்று தர்க்குபவர்க்கு நான் சொல்லும் பதில் அட, வெளிப்பாவனையாகவே இருந்து விட்டுப் போகட்டுமே! அப்புறம் எல்லாமே பாவனை தான்!

பயனற்ற ஈடுபாடுகளில் வயது தேய்ந்து கொண்டிருக்கை யில், ஆழ்மனதில் அழகு மாத்திரம் அதன் தன்மையான மென்மையை அவ்வப்போது ஆங்காங்கே வெளிப்படுத்திக் கொண்டிருக்கையில், சென்றுபோன நாட்களுக்கு ஏங்குவதற்கு நேரமில்லை. கிடைத்ததைக் கண்ட மட்டும் உன் சக்திக்கு முடிந்தவரை பற்றிக்கொள். அந்த சுறுசுறுப்பு ஆர்வமே ஒர் அழகு.

மனம் எண்ணங்களை உற்பத்தி செய்துகொண்டே யிருக்கும் யந்திரம். இதன் விசித்திரமே சலனம், வார்ப்பு, வார்ப்பின் உருச்சொல், அதற்குரிய பாஷை, பாஷை தனக்கே அமைத்துக்கொள்ளும் பதம், சொல் தன்னைச் செயலாக்கச் செய்யும் முயற்சி, முயற்சியின் நேர்த்தி அதில் வெற்றி தோல்வி, அந்த ஒட்டு மொத்தமான Processஇதையே அதன் தனித்தனி எடையாக இயங்குவதில்