பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 *; செளந்தர்ய.

“என்ன சாப்பிடறேள். உப்புமா கிளறச் சொல்லட்டுமா? ஏ விசாலம். வாயேன். யார் வந்திருக்கா பாரு. நாட்டுப் பெண் எங்களை விடக் கொஞ்சம் மென்மையா வளர்ந்தவ. காரியம், சமையல் எல்லாம் நல்லா இருக்கும். விசாலம் சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். நெற்றி வியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டு, துடைத்த இடம் ஜெவஜெவ ஆகிக்கொண்டு அம்மாவைக் கண்டதும் நமஸ்கரித்தாள். என்னைக் கண்டுகொள்ள வில்லை. எனக்குச் சற்றுக் கோபம்தான்.

“என்ன மாமி! இவ்வளவு அழகாயிருக்காளே! என்னிடம் ஏண்டா நீயும் சொல்லல்லே?"

அம்மாவும் நடிக்கிறாளோ? முழுநடிப்பாகவும் தோன்ற

“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான். எப்படியும் உங்கள் மாதிரி ஆக முடியுமா? தெற்கத்திக்காராளே அவாள் நடைஉடை பேச்சு, காரியம் எல்லாம் அது தனி. பெரிய கோயில் மண்டகப்படி முழுக்க நெய். அது போகட்டும். நீங்கள் காப்பியேனும் சாப்பிட்டுத்தான் ஆகணும்.”

அவர்களுடைய காபி வாய்க்கு வழங்காது. அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பிரியம் கிடைக்குமா? அம்மா அவ்வளவு பிரியமாக, ஆர்வமாக, எப்படிக் குடிக்கிறாள்?

‘மாமி நான் ஒண்ணு கேக்கறேன். சம்மதிப்பேளா? உங்கள் நாட்டுப் பெண்ணை என்னோடு அனுப்புவேளா? ஒரு வாரம் எங்காத்தில் இருக்கட்டும்.”

ஒ. இதுதான் அம்மா இங்கே வந்த பிளானா? சுந்தரம்மா அம்மாவின் இருகைகளைப் பற்றிக் கொண்டாள்.