பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 o செளந்தர்ய.

சிலிர்த்த பிடரியும் சீறிய வாயும் துள்ளிய காலுமாய் நிற்கின்றன. மேலே வானம். கீழே பூமி. முகட்டில் வயல்களில் காற்று கதிர்கள் மேல் வீசுகையில் பச்சை சாமரம் வீசுகிறது. பிரும்மனின் ஒவியம் படபடப்பதைக் கண்ணை மூடிக்கொண்டு அதிசயத்தில் நெஞ்சைத் தொட்டுக் கொள்ளுங்கள். தெருவில் ஒரிருவர் அவர்கள் வீட்டுக் கொறடில் நின்றபடி கைக்கூப்புகிறார்கள். ஐயர் வீட்டு அம்மாவை அவர்கள் அடிக்கடி பார்த்ததில்லை. அம்மா பதிலுக்குப் புன்முறுவல் பூக்கிறாள். இம்மாதிரி பரஸ்பர மோனமுகமன் கிராமங்களில் அதிகமாகப் பார்க்கலாம். அதன் வழியில் அது அழகுதான்.

அம்மாவும் விசாலமும் கூடத்தில் படுத்துக் கொண்டார்கள். விசாலம் பூனைக்குட்டி மாதிரி சுருண்டு கொண்டு.

குள்ளி. மறுநாள் காலை அம்மா முன்னையோ, பின்னயோ, விசாலம் குளித்துவிட்டு வாசல் தெளித்துவிட்டு, கோல மிட்டு விட்டு உள்ளே வந்தாள்.

அம்மா எல்லோருக்கும் காபி கலந்து கொண்டிருந்தாள். "வா விசாலம். காபி குடி” 'அதுக்குள்ளேயா?”

“இதன் பேர்தான் காபி வேளை. அது அதுக்கு அதனதன் வேளை உண்டு. அப்பொத்தான் அதுக்கு அர்த்தம், ருசி. இது எங்கள் வழி. மாமாவுக்கு உடம்பு சரியில்லையா? அவரை இப்படித்தான் கவனிக்கணும்.”