பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 哆 செளந்தர்ய.

“ரெண்டு தங்கச்சிகள். அண்ணன் தம்பிங்க கிடையாது.

"அப்பா?-” “இப்பத்தான் காலமானார். ஒருவருஷமாச்சு.” 'அம்மா?” "இருக்கா. வாயில்லாப்பூச்சி. ஒண்டியாத்தானிருக்கா. கோயில் நிலத்திலிருந்து சாப்பாட்டுக்கு மட்டும் கொடுக் கறாங்க வீடு கோயில் வீடு பூஜையை வேறு ஆள் வந்து முறைபாத்துக்கறான். இது எங்கள் ஜாதிப் பழக்கம்.”

“நல்ல பழக்கம்தான். உன் தங்கைகள் உன் மாதிரி இருப்பார்களா?”

"இல்லை. குண்டுங்க. பெரியவள் நல்ல பருமன் இல்லே. வியாதி. பெரியகோயில் குருக்களுக்குக் கொடுத்திருக்கு. உங்கள் மூத்தபிள்ளை அவள் வீட்டுக்கு வந்திருக்காரு. நீங்க எப்ப வரப்போlங்க? திருவாதிரை வெள்ளிக்கிழமை அதிகாரநந்தி நல்லாயிருக்கும் வாங்க-”

“பார்க்கலாம். நான் வரதும் போறதும் என் இஷ்டத்தில் இல்லை. மார்கழி பனி இவருக்கு ஆகவே ஆகாது. பிறகு அதைப்பத்திக் கவலை என்ன?”

அம்மாவின் நிலைமையைச் சிந்தித்துப் பார்க்கிறேன். என் கண்களை இப்பவும் நீர்த்திரை இடுகிறது. எனக்குத் தான். அம்மாவுக்கு இல்லை.

டாக்டர் (நாட்டுவைத்தியர்) அம்மாவிடம் அப்பப்போ சொல்வார். “அம்மா உங்கள் மஞ்சள் கயிறு உரத்தில்தான் ஐயா வண்டி ஒடுது. நீங்க நல்லாயிருக்கணும். அவர் கிராமத்துக்கு வைத்தியர் மட்டுமல்ல. ஜோஸ்யர் கூட அம்மா புன்னகை பூத்தபடி, சாமி படத்துக்குப் பக்கலில் ஒரு