பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளந்தர்ய...

இன்று அதிகாலை காபி போட்டு சாப்பிட்டு விட்டு

முப்பத்திஐந்து வருடங்களாக நான்தான் காலை காபி போடுகிறேன். நான் போடாவிட்டாலும் எனக்குக் கிடைக்கும். ஆனால் என் மனைவியின் வேளையில்தான் கிடைக்கும். காபிவேளையில் கிடைக்காது. அதனதற்கு அதனதன் வேளை உண்டு. வேளை தட்டினால் ருசியே போச்சு (வக்கணையைப் பாரு) இதைவிட சுருக்கப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது முடியவில்லை. வயதாகி விட்டதல்லவா?

சாய்வு நாற்காலியில் அமர்ந்து காபி சாப்பிட்டு விட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். “இன்றைய பொழுது எப்படி விடியப்போகிறது. இரவு பரவாயில்லை. நன்றாகவே தூங்கியிருக்கிறேன். இந்த சுக சிந்தனைக்கே, இதுவே காரணமாயிருக்கலாம். நேற்று ஜங்ஷனில் திரு ச. கந்தசாமியின் பேட்டியை படித்த நினைவு வந்தது. அதிலிருந்த ஒரிரு வாக்கியங்கள் என்னைப் பற்றி எழுதி யிருக்கிறார்.

"சங்க இலக்கியத்தின் எளிமை பாட புத்தகத்தின் எளிமை. இந்த எளிமை என்னுடைய எழுத்திலும் இருக்க