பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ * செளந்தர்ய.

“அது ஏது? ரஸ்மோ குழம்போ, ஒரு பொரியல், சுட வெக்கக்கூட சோம்பல். அடுப்பை மூட்டி யாரு கஷ்டப் படறது?”

"வாஸ்தவம் விசாலம். இங்கே வந்து எங்களைப் பார்த்து சங்கோஜப்படாதே. வயித்துக்கு வஞ்சகம் பண்ணாதே, நாங்கள் எந்தக் கணக்கிலேயும் சேர்த்தி இல்லை. ஆண்ால் எங்கள் கிராமத்தில் நல்லா சாப்பிடறவங்க இருக்கா. எனக்கு அத்தை இருக்கா. நம்பினால் நம்பு, நம்பாட்டா போ. ஒரு கால்படி வெங்கலப்பானை க்ளோஸ் பண்ணிடுவா. இத்தனைக்கும் வேண்டியே இல்லேடி அம்மாப்பொண்ணேன்னு குறைபட்டுண்டே சாப்பிடுவா ஏமாந்துபோய் எடுத்துண்டு போகப்படாது. எட்டு ஊருக்கு சொல்லிண்டு இருப்பா. நன்னா உழைக்கறவா நன்னா சாப்பிடறவா. அப்பொ எல்லாம் ரூபாய்க்கு பன்னிரண்டு படி அரிசி. வாங்க ரூபாய்தான் இல்லை. வாங்கவேண்டிய அவசியமும் இல்லை. சொந்த விளைச்சல், நாலு பேருக்கு போடறவா. வாங்கறவா இல்லே. வேலைக்குன்னு ஊரை விட்டு வெளியே வந்துட்ட நாங்கதான் வாங்கித் தின்ன வேண்டியிருக்கு. வாங்கணும்னு ஆரம்பிச்சுட்டா, எல்லாத் திலேயும் விதம்விதமா பிரிஞ்சு போயிடறது. அந்தநாளிலே டி.பன்ங்கற வார்த்தையே கிடையாது. எப்பவும் பலகாரம் தான். பண்டிகையானாலும் சரி, கலியாணமானாலும் சரி, பலகாரம், பழையது, இட்டிலி, தோசை, அடை, அரிசி உப்புமா இதுதான் பண்ணுவா. இப்பத்தான் ரவை, பூரின்னு வந்திருக்கு. சப்பாத்தியாம். எனக்கு இன்னும் சரியா பண்ண வரல்லே. சமையலிலும் எல்லாம் வெந்த பண்டம். வதக்கத் தெரியாது. வதக்கினாலும் எண்ணெய்க்கும் உடம்புக்கும் கேடு.”

இப்படி அந்த நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக் கிறாள்.