பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 74

படிக்குத் தனித்தனி அபிஷேகம். நைவேத்யம் ஆராதனை. வழக்கமான அபிஷேகங்களுக்குப் பிறகு (சிவன் அபிஷேகப் பிரியராச்சே! விஷ்ணு அலங்காரப்பிரியர்!) அன்னத்தை அடையடையாக இரண்டு குருக்கள்களும் லிங்கத்தின் மீது அப்பினார்கள். ஒரு அபிஷேகத்திற்கு ஒன்றரை மரக்கால் அரிசியேனும் வடிச்சு ஆகணும். அரிசியைப்பற்றி மண்டகப் படிக்காரருக்குக் கவலை இல்லை. அவன் ஏக்கரில் விளைந்த நெல்தானே! அபிஷேகத்துக்கு அபிஷேகம், தீபஆராதனை, நைவேத்யம் அர்ச்சனை தனி ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் பொறுத்து இந்த அன்னத்தைக் களைந்துவிட்டு அடுத்த மண்டகப்படி அன்னக்காப்பில் பார்க்கையில் லிங்கம் அழகாய்த்தானிருக்கிறது. மண்டகப்படிக்காரர் யாரும் வரவில்லை. அடுத்தநாள் கோர்ட் வியாஜ்யமாகவோ, வியாபார நிமித்தமாகவோ, காஞ்சீபுரம் போயாக வேண்டும். தrணை அஞ்சு கொடுப்பானோ பத்து கொடுப்பானோ அதில் உதவி செய்யும் குருக்களுக்கு பங்கு கொடுத்தாகணும். கண்கள் திகுதிகுவென எரிந்து உடம்பு முறித்து போட்டாற் போல வலித்தது. ஒரு கோவில் தூணுக்கடியில் சுருண்டு விட்டேன். வைத்தி தட்டி எழுப்பினபோது பொலபொல வெனப் புலர்ந்திருந்தது. கை நிறைய சுண்டலும் ஒரு பாத்திரத்தில் அன்னப்ரஸாதமும் வைத்தி கொடுத்தான்.

என் அன்னாபிஷேக அனுபவம் அப்படி

ஆனால் எத்தனை சிரமப்பட்டாலும் வைத்தி எப்படி சமாளிக்கிறான்?

“நாங்களா சமாளிக்கிறோம்? முறுக்கிய சவுக்கத்தால் முதுகு வேர்வையைத் துடைத்துக்கொண்டே, “எங்கள் ஏழ்மை சமாளிக்கிறது. குருக்கள் வம்ஸத்தின் பரம்பரை ஏழ்மை.”