பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 * செளந்தர்ய.

ஆனால் வைத்தியிடம் சுவாமி மேல் தனிச் சிரத்தை தெரிந்தது. அவன் கோவில் முருகன்கோவில். பரம்பரையாய் அவன் தாத்தாவின் தந்தை காலத்திலிருந்து ஆராதிக் கிறார்கள்.

முருகன் சிவனுடைய நேர்ப்பிறப்புத்தான், நெற்றிக்கண் பொறியேதான் என்று சிவராத்ரி அன்னாபிஷேகத்தைத் தன் கோவிலுக்கும் இழுத்திருப்பான். ஆனால் விசாலம் திட்ட வட்டமாய்த் தடுத்துவிட்டாள். “செலவுக்கு, தக்ஷணைக்கேத்த படி, துக்காணி பிரண்டாலே ஒழிய நம்மால் சமாளிக்க முடியாது. புராணத்தைப் புதுசா எளுதாதீங்க. இந்த மண்டகப்படிக்காரர்கள் தளத்தற துட்டுலே, பொங்கல்லே நெய்யைக் காணோம். முந்திரியில்லே- ஐய்யய்யோ இவங் களோட மாரடிச்சு என் பிராண்னே போவுது-”

洪源

திங்கள் மாலை வைத்தி வந்து விட்டான். இருவரும் அம்மாவை நமஸ்கரித்தனர். விசாலத்துக்கு அம்மா ஒரு புதுப்புடவை, ரவிக்கை, செண்டுமல்லி, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் கொடுத்து புடவையை அப்பவே கட்டிக் கொள்ளச் சொன்னாள். விசாலம் கொசுவம் வைத்துத்தான் கட்டிக் கொண்டாள். வைத்தி வாட்டசாட்டமாய் இரண்டடி முன்னால் போக விசாலம் குள்ளமாய் சிவப்பு மரப்பாச்சி யாட்டம் தொடர இருவரும் போவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"விசாலம் மேல உனக்கு என்னம்மா அவ்வளவு கரிசனம்?” என் குரலில் ஏளனமா லேசான பொறாமையா எது தூக்கி ஒலித்தது எனக்குத் தெரியவில்லை. தான் கண்டுகொண்ட மாதிரி அம்மாவும் காட்டிக் கொள்ள வில்லை. பதில் சொன்னாள்: