பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 73

“அவள் வயதில் என் வாழ்நாள் சந்தோஷமாயில்லை, ராமாமிருதம். நாங்கள் ரொம்ப ஏழைகள். எனக்குப் பிறந்தகம், புக்ககம் என்று தனியாய்க் கிடையாது. என் அம்மாவுக்கும் கிடையாது. அப்பாவுக்குக் கெட்ட சகவாசம். கஞ்சா பிடிப்பார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒத்துக் கல்லே. அவள் மணவாழ்க்கையில் பாதிக்குமேல் அண்ணா விட்டுக்கு வந்துவிடுவாள். அங்கு மாமாவும் வளமாயில்லை. ஆனாலும் ராமண்ணாதான் அவளுக்குச் செல்லம். சீமதி தான் அவருக்குச் செல்லத் தங்கை.

என் அப்பாவுக்கு அவருடைய சகோதரர்களிடம் மதிப்பில்லை. அவர் பாகத்தை அவர்களே பிரித்துக் கொடுத்துவிட்டார்கள். எல்லாவற்றையும் விற்றுச் செலவழித்து அனாதையாக அவர் செத்தபின் அம்மா அஞ்சு குழந்தைகளுடன் ராமண்ணாவுடன் தங்கிவிட்டாள். அவளும் எங்களை விட்டுவிட்டு செத்துப்போய்விட்டாள்.

மற்ற மாமன்மாரும் எங்கள் மேல் பிரியமாயிருந்தார்கள். ஆளுக்கு முறைபோட்டுக் கொண்டு எங்களை பராமரித் தார்கள். ஆனால் ஆயிரம் உறவுச் சோறானாலும் தருமச் சோறுதானே! ஆனால் அதுகூட இல்லாமல் நாங்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியுமா? என் அக்காவுக்கு அம்மா இருக்கும் போதே கலியாணமாயிடுத்து. நான் ராமண்ணா மகனையே மணந்துகொண்டேன். ஆகவே எனக்குப் பிறந்தகம், புக்ககம் எல்லாம் புக்ககம்தான். அப்பாமேல், அவா மனுஷாமேல் எப்பவோ பிடிப்பு விட்டுப் போச்சு. தொடர்பும் விட்டுப் போச்சு.

இந்தப் பெண்ணைப் பார்க்கையில் எனக்கும் அவளுக்கும் பிரமாத வித்யாசம் தெரியவில்லை. இவள் கண்களிலும் ஒரு மலுங்கல் தெரியறது. எட்டு வயதிலேயே