பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் * 75

சாயந்தரத்து பூஜைக்கே ஆளில்லையாம். இதாம்பா குருக்கள் பொழைப்பு. கிடைச்சதை அப்பவே பத்திக்கணும். கொஞ்ச நாளாவே வைத்திக்கு முருகன் கோயிலில் நிர்வாகஸ்த் தர்களின் நடத்தையும் அலட்ஷியமும் ஒத்து வரலே. அமாவாசை அன்று உண்டிப் பெட்டியைத் திறந்து கிடைத்ததை சம்பளமாகக் கொள்ள வேணுமென்றால் அது எப்படி சரிப்பட்டு வரும்? அவர்களிடம் வைத்தி பளிச்சென்று சொல்லிவிட்டான். அவங்க கிணுங்குவதாகத் தெரியவில்லை. இது என்ன பெரிய கோயில்னு நெனைச்சுட் டீங்களா? பதில் எனக்கு ஏகாம்பரநாதரை விட நம்ப முருகக்கடவுள்தான் முக்கியம். என் முழு பூஜையையும் நிம்மதியாய் செய்ய விடமாட்டேங்கறாளே."

'உங்க தாயாதி குருக்களே இந்தக் கோயிலை ஏற்றுக் கொள்ள போட்டியாக நிக்கறாங்க!”

‘சரி. வெச்சுகிட்டு நடத்திக்கோங்கோ. முருகன் எங்கே

யாவது எனக்குப் படியளந்து வெச்சிருக்கமாட்டானா?

சொல்லிவெச்சாப்போல இவங்க அன்னிக்கு மத்யானமே வந்துட்டாங்க. ஆனால் முருகனுக்கு அவா வஞ்சனை செய்யலை. இந்தக் கோயிலை தலைமுறையாக செய்கிறோம். முருகன் திரும்பி எங்களை அழைச்சுப்பான். எங்களுக்கு நம்பிக்கை இருக்குது.”

"அப்புறம் நீங்களும் போயிடுவீங்களா?”

“அது நடக்காத காரியம். அவனவன் பொழைப்பு அவனவனுடையதுதான். இவங்க அப்பாக்கு நாலு பிள்ளையார் கோயில் இருக்குது. அதை கவனிப்பார். ஏதாவது ஒண்ணு ரெண்டு அர்ச்சனை வரும். அமாவாசை தர்ப்பனம், திதி. புரோகிதம் குருக்கள்தானே? அப்புறம் மாசச் சம்பளம் இங்கெல்லாம் என்ன தட்டுகெட்டுப்