பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 : செளந்தர்ய.

போவுது. களத்துமேட்டுல வருஷத்துக்கு அளக்கற நெல் தானே? அதனால பானைல இருக்கற நெல்லை வெச்சுகிட்டு சமாளிக்க வேண்டியதுதான். அப்புறம் கைமாத்து, கடன் வைத்திக்கு மூத்தவன் சங்கரன் வந்தால் போனால் ஏதேனும் கொடுப்பாங்க. அப்படிக் காலத்தைத் தள்ள வேண்டியது தான். தாயாதியே குழி ப க்கிறானே. நாங்க என்ன செய்ய முடியும்?"

அவர்கள் பிழைப்புக்கு இரங்குவதா சிரிப்பதா தெரிய வில்லை. ஆனால் அவர்கள் கவலைப்படுவதாகத் தெரிய வில்லை. ஆண்டவன் விட்ட வழி என்று விரக்தியாகவும் இல்லை. ஆண்டவன் வழியை விடத்தான் செய்கிறான். இந்தச் சின்னக் கோவில் குருக்கள்மார்கள் இப்படி தினசரி சோதனைகளுக்குப் பழகிவிட்டார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

கலைய வேளை வந்துவிட்டது என்று நினைக்கிறேன். சித்தப்பா அவசரமாய் என்னைப் பட்டணத்திற்கு வர வழைத்து எனக்கு வாஹினி ஸ்டுடியோவில் தட்டெழுத்து வேலை வாங்கித் தந்தார். சம்பளம் சுளையாய் இருபத்தி ஐந்து ரூபாய்கள். வேலை முதுகு நரம்பு கயண்டது. முதல் ஞாயிற்றுக்கிழமை நான் போகவில்லை. அடுத்த நாள் போனால் ஏக வசவு, “நீங்களெல்லாம் என்ன கெசட்டப் ஆபீசர்ங்களா? ஞாயிற்றுக்கிழமை வரமாட்டீங்களா? இது சினிமா கம்பெனி ப்ரதர்.”

அடுத்த ஞாயிறிலிருந்து இரண்டு மணிக்கு விட்டு விடுவார்கள். ஒருசமயம் என் பாட்டியின் உடல்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. காஞ்சீபுரம் போக அனுமதி கொடுத்தான். டாட்டிக்கு நினைவு தப்பிவிட்டதே தவிர உயிர் போகவில்லை. நான் காத்திருக்க முடியாது. பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டவள். ஆனால் உயிர்மேல் உடலின் பிடி கெட்டி