பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 77

இம்மி இம்மியாகத்தான் ஒடுங்குகிறாள். ஆனால் நான் இருக்க முடியாது. அன்று மாலையே பட்டிணம் திரும்பி விட்டேன். அடுத்த நாள் காலையே காஞ்சீபுரத்தில் இருந்து ஆள்வந்துவிட்டான். அப்போதெல்லாம் தந்தி, டெலிபோன் இப்போதுபோல் கிடையாது. என் மேனேஜரிடம் போன போது சுள்ளென விழுந்தார். "ஆமா உங்க வீட்டுல வேற வேலை என்ன? இன்னிக்குப் பாட்டி செத்துப்போவாள். நாளைக்கு இன்னொருத்தன். இஷ்டமிருந்தா வேலைபாரு. இல்லாட்டி போயிடு அவன் சுலபமாய் சொல்லிவிட்டான். நான் போக முடியுமா? அப்புறம் என்ன தோன்றிற்றோ தெரியவில்லை. 'போ, போ” என்று தானே கூப்பிட்டு அனுப்பிவிட்டான். இப்போது யோசித்துப் பார்க்கிறேன். 'எந்த தினுசில் குருக்கள் பிழைப்பை விட என்னுடையது தேவலை? அவரவர்க்கு அவரவர் விரல் வீக்கம்.

எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி விசாலாட்சி வைத்தி நினைப்பு வரத் தொடங்கிவிட்டது. பார்த்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ரொம்ப அபூர்வமாக ரெண்டு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை கிடைத்தது. நான் வாடாதவூருக்கு பஸ் ஏறி விட்டேன். பஸ் ஸ்டாப்பிலிருந்து வயல் வரப்பின்மேல் மூன்று மைல் நடந்து செல்லவேண்டும். நன்றாக இருட்டிவிட்டது. ஈஸ்வரோரrது.

வாடாதவூர் அப்போது எனக்கு ஒரு faily land மாதிரி தான் தோன்றிற்று. வெகு நாட்களுக்கு முன் வறட்சியாக இருந்தபோது ஒளவைக்கிழவி பசியோடு அங்கு வந்த போது அந்த ஊர்மக்கள் அவளுக்கு வயிறார உணவிட்டு உபசரித்தார்களாம். கிழவிதான் கூழுக்குப்பாடி ஆயிற்றே. இந்த ஊருக்குக் கஷ்டமே வரக்கூடாது என்று ஆசீர்வதித்துப் போய்விட்டாள். அதிலிருந்து வேளாவேளைக்கு மழைக்குப்