பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ *.* செளந்தர்ய.

வேண்டுமென விரும்பினேன். இதன் அடிப்படையிலேயே என்னுடைய நாவல்களும் சிறுகதைகளும் அமையலாயின. அண்ணா, கருணாநிதி, லா. ச. ராமாமிருதம் போன்றவர் களைப் படித்ததனால் ஏற்பட்ட விளைவு இது. நம் இலக்கியவாதிகள் லா, ச. ராமாமிருதத்தின் அலங்காரத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். திராவிடப் பாரம்பர்ய எழுத்தை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.”

இந்த ஒரு எழுத்தில் மட்டுமன்று. என்னுடைய அலங்காரத்தைப்பற்றி அவர் துரத்தித்துரத்தி அடித்திருக் கிறார். அவருடைய நோக்கம் நடை தெளிந்த நீரோடை மாதிரி இருக்கவேண்டும் என்பது என்றே நினைக்கிறேன். இது சிரமசாத்தியம் ஆனாலும் அவரைப் பொறுத்தவரை பல இடங்களில் அவர் நடையில் அவர் சாதித்திருக்கிறார். கந்தசாமியும் நானும் தீபம் காலத்திலிருந்தே பழக்கம். மனம் போனவாக்கில் ஜங்ஷனில் அவர் என்னைப் பற்றி எழுதி இருப்பது நினைவுக்கு வந்தது என்கிற வரையில் மட்டுமே இந்தக் கூற்று பொருந்தும். திரு கந்தசாமி எழுத்துத் துறையில் என்னைக்காட்டிலும் மிக்க அனுபவசாலி. பத்திரிகை, கதைத்தொகுப்பு, தொலைக்காட்சித் தொடர், டாகுமெண்டரி- அவருடைய ஈடுபாடுகள் இப்படிப் போகின்றன.

நானோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று எழுத்துடன் சரி. கவிதை கூட முயற்சி செய்ததில்லை. என் எழுத்தைப்பற்றி வேணய விமர்சனங்கள் வந்துவிட்டன. அதில் கவித்வம் இருக்கிறதாம். என் சொல்லாட்சியைப் பற்றித்தான் சொல்கிறார்கள். நான் சொல்லுகிற விஷயமும் குடும்பம் என்கிற வட்டத்தைத் தாண்டவில்லை. இத்தனைக்கும் நான் புரியாத எழுத்தாளன் என்று பெயர் வாங்கி விட்டேன்.--