பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 79

“என்னமோப்பா எனக்குத் தெரியலை எனக்கு அவளை பிடிச்சுப்போச்சு"- என்று சொல்லுகிறோமல்லவா? இது நட்பு. காவிய காலத்திலிருந்தே இந்த உறவு இயங்கிக் கொண்டிருக்கிறது. விருப்பத்துக்கு உதாரணமாக ராமனும் ஹநுமனும். விரோதத்திற்கு துரியோதனனும் பீமனும் காலம் முற்ற முற்ற இந்த உறவின் உக்ரஹம் நீர்த்துப்போய்விட்டது என்றாலும் இன்னும் அழிந்து போய்விடவில்லை. இது ஒர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் நேர்கையில் அதன் சிலிர்ப்பை மறுக்க முடியவில்லை.

கலைந்த தூக்கத்திலிருந்து நான் விழித்தபோது நன்றாகவே விடிந்திருந்தது. கிரணங்களின் பொன் வீட்டினுள் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது. கண்ணைக் கசக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்பவும் ஒரே அறைதான். அது ஒரு அறை கூட இல்லை. நாலு பக்கங்களிலும் தடுப்பு. கண்ணைக் கசக்கினாலும் again dream land.

விசாலம் அடுப்படியில் வேலையாயிருந்தாள். வைத்தி போயாச்சு. நான் எழுந்து வெளியே வந்தேன். எனக்குப் பல் விளக்க தண்ணர், நஞ்சன்கூடு. இப்போது தெரிந்தது இவர்கள் கோவிலுக்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருந் தார்கள். பிராகாரத்துக்கு வெளியே அகன்ற நிலத்தில் மதிலுக்கு உட்புறம் ஒரு சுவரால், மற்ற மூன்று பக்கங்கள் ஒற்றைக்கல் சுவர்களாய் அவைகளுக்கு மேல் ஏதோ கூரை என்ற பெயர். வெய்யிலுக்குத் தடுப்பு. மழை வந்தால் தாங்குமோ தாங்காதோ, அப்போது வேறு ஏற்பாடு ஆகுமோ என்னமோ. அவரை, புடலை என்று பயிர்ப்பந்தல் விசாலத்தின் வேலையாயிருக்கும். சூரியனின் தங்கத் தாம்பாளம் ஜொலித்துக் கொண்டு என்னை வரவேற்றது. ஆகாய நீலம், பூமியின் பசுமை. காலை வேளையின்