பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 : செளந்தர்ய.

உற்சாகம் இயற்கையின் இதழ் அவிழ்தல்- இவைஎல்லாம் நினைவில் அன்றி வேறு எங்கே பார்க்கப் போகிறேன். என் பின் சந்ததிகளுக்கு அதற்கும் வாய்ப்பில்லை. அதில் அவர்களுக்கு நாட்டமும் இல்லை. அதுதான் என் பெரிய துக்கம். ஆஸ்கார் Goosso. Gloropstair: “It is better to have loved and lost than never to have loved at all,” supoor மனம் எவ்வளவு பயங்கரம் அழகைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு தரிசனம்தான். மனம் எங்கோ நழுவி விடுகிறது. ஒன்றைத் தொட்டு ஒன்று தன்னைத்தானே நிரப்பிக் கொள்கிறது. தேடல் தத்துவமே என்ன? பிறப்பின் நோக்கமே என்ன? தன் முழுமைதான். என் முழுமை கிட்டும் எதார்த்தமாகுமா? ஆனால் யதார்த்தத்திற்குச் சிதைக்கும் வினை ஆச்சே, இது என் தலைவிதியாகப் போச்சு. எப்பவும் முரணாக எண்ணங்கள் ஒரேசமயத்தில் மோதிக்கொள்ளும். லேசாய் நெஞ்சை அடைக்கிறது.

“என்ன எங்கள் குடித்தனத்தைப் பாக்கற்ங்களா?”

திடுக்கிட்டாற்போலத் திரும்பினேன். விசாலம் கையில் டம்ளருடன் நின்றிருந்தாள். தலை ஈரம் காயவில்லை. அவள் புன்முறுவலில் இந்த இடம் வேளையுடன் அதன் யகூஷிணி போல வெகு இயற்கையாக இணைந்திருந்தாள்.

“இது நல்ல இடந்தான். ஜனங்கள் கொஞ்சமாய் இருந்தாலும் நல்ல மனுஷாதான். கோயிலை எப்படியோ பெரிதாய்க் கட்டிவிட்டார்கள். சிவன்கோயில் இடம் இப்ப பேமசாய் இருக்குது. ஒடு போட்டுத் தரேன்னு சொல்லி இருக்காங்க போகப் போகத்தான் தெரியும். மழைக்காலம் நெருங்குது. பூச்சி பொட்டுக்குக் குறைவில்லை. பிழைப்பை ஆண்டவன் இங்கே முடிச்சுப் போட்டிருந்தால் என்ன செய்யறது? புதுசாய்ப் பழகிக்க வேண்டியதுதான். பால்,