பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

伊

லா. ச. ராமாமிருதம் : 8i

தயிர் சும்மா கொடுக்கறாங்க. தினம் ஒரு மரக்கால் அரிசி.”

"அப்படி ஒண்னும் மோசமில்லை போல இருக்கே?"

"ஆனால் துட்டு என்று தனியாப் பாக்கமுடியாது. இது ஒரு ஒதுக்குப்புறமா போயிடுச்சு. இவருக்குப் புடிக்கலை. அவருக்கு அவருடைய முருகன்தான் வேணும். ஆமா என்ன நீங்க எனக்கு நவராத்திரிக்குப் பணம் அனுப்பிச்சீங்க?"

“அனுப்பக் கூடாதா? நவராத்திரி கார்த்திகை, சங்கராந்தி சமயங்களில் மஞ்சள் குங்குமத்துக்கென்று உடன்பிறந்தான்மாருக்கு அனுப்புவதுண்டு.”

“அதுக்காக அஞ்சுரூபா, பெரிய துட்டு இல்லையா?”

நான் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சிரித்தபடி கையை விரித்தேன்.

இதுசாக்கில் இப்பவே சொல்கிறேன். அன்று ஆரம்பித்த இந்தப் பழக்கம் விசாலத்தின் கடைசி நவராத்திரி வரை தொடர்ந்தது. அதற்கு அடுத்து வந்த கார்த்திகைக்கு ஏன் தீபாவளிக்கு உள்ளேயே மறைந்து விட்டாளே. எனக்கு அவள் இறந்த சேதிக்குத் தந்தி அனுப்பிய முகவரியே, முன்பு நான் அனுப்பியிருந்த மணி ஆர்டரிலிருந்து கண்டுபிடித்த முகவரிதான் என்று வைத்தி சொன்னான். அந்த ஐம்பது ரூபாயையும் மணிஆர்டர் கூப்பனையும் பெட்டிக்கடியில் போட்டு வைத்திருந்தானாம் என்று கண்ணன் சேதி கொண்டுவந்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது.

ஒரு தடவை பேச்சோடு பேச்சாய் சகஜமாய் நான் அவளைக் கேட்டேன், “விசாலம், உனக்கு இப்போ அம்பத்தஞ்சு வயசாகப் போவுது எவ்வளவு பணம் சேர்த்து வெச்சிருப்பே'