பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 & செளந்தர்ய.

போட்டு செஞ்சிருக்கேன். அதெல்லாம் வீணாயிடுமா? அவன் அழைக்கிற வேளைக்குக் காத்திருக்கேன் ராமாமிர்தம் கொஞ்சம் பாடேன். கேட்கலாம்.”

ஆம். நானும் பாடுவேன். நன்றாய் பாடுவேன். அவர்கள் வீட்டிற்கு நவராத்ரிக்கு பாடி இருக்கிறேன். நவராத்ரி என்றால் கொலு கிடையாது. வைத்தியின் தகப்பனார் ஒரு ராஜராஜேஸ்வரி விக்ரஹத்தை வீட்டில் ஆராதனை செய்து கொண்டிருந்தார். முன்னோர்கள் காலத்தில் இருந்தே செய்யும் பூஜை. இதற்குத் தனியாக நைவேத்யம். நவராத்ரியின் போது சற்று அலங்காரம் கூட இருக்கும்.

வைத்தியின் அப்பா நொண்டி குருக்களுக்குப் போகப் போக இந்த பூஜையை பண்ண முடியவில்லை. வைத்தி கொஞ்சநாள் செய்து கொண்டிருந்தான். பிறகு அவனாலும் தொடர முடியவில்லை. என் நாளிலேயே அந்த விக்ரஹம் அதன் விமானத்தோடு அவர்கள் வீட்டுச் சமையலறையில் ஒரு இருட்டுமூலையில் கிடந்தது. இப்போது வைத்தியும் போயாச்சு. எங்கே உருண்டு கிடக்கோ. பேச்சோடு பேச்சாக சொல்லவந்தது சிந்தனையைத் தூண்டுகிறது. சிரத்தை என்பதற்கு அடிப்படையான அர்த்தமும் ஆயுசும் என்ன? ராமச்சந்திர குருக்கள் (வைத்தியின் அப்பா) ஏன், அக்ர ஹாரத்திலேயே எல்லா குருக்கள் குடும்பமும் ஏழைதான். ஆனால் நவராத்ரி சமயத்தில் குருக்கள் தன் சக்திக்கு மீறித் தான் வீட்டில் கொண்டாடினார். நவராத்ரியில் ஒருநாள் காஞ்சீபுரத்திலிருந்து யாராவது பாட வருவார்கள். நைனாப் பிள்ளையின் சிஷ்யனின் சிஷ்யன் என்று சொல்லிக் கொள்ளுவார். பக்கவாத்யங்களுடன் வரவழைப்பார்கள். அவன் சிஷ்யனா இல்லையா என்று நான் சந்தேகிக்கவே

இல்லை. சிஷ்யனாகவே இருப்பான். இருந்தான். இருக்கட்டும்.