பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎

லா. ச. ராமாமிருதம் : 85

ஆனால் துரத்திவிடப்பட்ட சிஷ்யனாய்த்தானிருந்தான். அதுகூட முக்யமில்லை. நைனாப் பிள்ளை என்ற பெயர் சம்பந்தம் இருக்கிறதே அதுதான் மவுசு. அவனுக்கு சாப்பாடு என்ன? வண்டிச்சத்தம் என்ன? கைச்செலவுக்குப் பணம் கொஞ்சம்தான் என்றாலும் குருக்களால் இயன்றது அவ்வளவுதான். இப்படி எல்லாம் அல்ப சந்தோஷம் அனுபவித்த எளிய மக்களை நாம் இனி காண்போமா?

ஒருநாள் தற்செயலாக சுந்தராமாமி என்னைப் பாடச் சொன்னாள். நான் பிகுபண்ணிக் கொள்ளாமல் பாடினேன். ஒரு பாட்டு என்பது ஒன்பது பாட்டாகி கச்சேரி நீளம் ஆகிவிட்டது.

"நாம் காஞ்சீபுரத்திலிருந்து யாரையும் வரவழைத்திருக்க வேண்டாமே. அதைவிட நன்றாய் இருக்கிறதே"- இது வைத்தி.

நொண்டி குருக்கள் செவிட்டு குருக்களும் கூட நான் பாடினதெல்லாம் அவர் அனுபவித்திருக்கவே முடியாது. நொண்டி (வாதம்) செவிடு (பிறவி) குருடு (வயசு) உடைந்த கண்ணாடிகளை நூலில் கோர்த்துக் காதில் சுற்றிக் கொண்டிருப்பார்.

குருக்கள் ஆசிர்வதிக்கிறார். "எல்லாம் அம்பாளுடைய பிரசாதம்தான்.” என்னுள் பெருமிதம் பொங்குகிறது. இந்த சமயத்தில் நான் ஒன்று சொல்வது அவசியமாகிறது. கண்ணன் கேட்கிறான்: "இது என்ன சரித்திரமா? நாவலா? கட்டுரையா? சிந்தனைத் தொடரா? விசாலாட்சியின் சரித்திரமா? எதுவும் தொடர்ச்சியாக இல்லையே?”

இதற்கு பதில் நான் ஏற்கெனவே இந்த எழுத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதாக ஞாபகம். எண்ணங்கள்