பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 : செளந்தர்ய.

தோன்றுகையில் சிதர் சிதராக உதிர்கின்றது. புத்தி பின்னால் அவைகளைக் கோர்வைப்படுத்துகிறது.

செளந்தர்யம் என்கிற பாவம் காலத்திற்கு அப்பாற் பட்டது. அழகை எப்படி, எப்போது, எதில் நுகர முடியும்? பக்குவத்தை அதன் தன்மையை வேளை கூற முடியாது. ஏதோ ஒரு தினுசில் என் மனசு திறக்கிறது. அந்திம காலத்தின் பேழை உருவங்கள் முன்னும் பின்னுமாக ஒருசமயம் ஒளிகாட்டி ஒருசமயம் இருள்காட்டி உள்ளேயே சுற்றிச் சுழன்று மறைகின்றன. நான் கண்டதைச் சொல் கிறேன். கண்ணன் எழுதுகிறான். அவரவர் விரும்பியதைக் கண்டு கொள்ளுங்கள். ஏற்கெனவே பண்டையோர் சொல்லி விட்டுப் போய்விட்டார்கள். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.

இது லா. ச. ராவின் உத்தி என்று உங்களை ஏமாற்றப் போவதில்லை.

என்னிடம் என்ன தகுதி இருக்கிறதோ, எண்ணத்திலும் செயலிலும் அழகென்று எது எனக்கு நேர்கிறதோ அதை துங்களிடம் செலுத்திவிட வேண்டும். நேரம்தான் எனக்கு இனி இனி என்ன எப்பவுமே அதுதான் உண்மை. ஆனாலும் அதன் அவசரத்தை வயதின் பாட்டில் இப்போது உணர்கிறேன். எப்பவும் உடலும் மனமும் இணைந்து அல்ல. தோற்றத்துக்குத் தனியாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. நேரத்தில் அவ்வப்போது ஒரு முறுக்கேற்றம் தெரிகிறது. சந்தோஷம் காரணமாயிருக்கலாம். எதிர்மாறாகவும் இருக்கக் கூடும்.

அந்த நாள் என்று ஒரு தனி உவகை, உடல் தென்புடன் மனதின் ஊக்கமும் கலக்கையில் நினைவில் சம்பவங்கள்